பிலிப்பைன்ஸ், மராவி நகரில் இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) தீவிரவாதிகளுக்கும் பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு படைகளுக்குமிடையில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட இரு மலேசியர்களும் உண்மையான இஸ்லாமியக் கல்வி அறிவு பெற்றவர்கள் அல்ல என்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறுகிறார்.
அவர்கள் இருவரும் சொர்க்கத்துச் செல்வதற்கான குறுக்குவழியாக ஜிகாட் என்று சொல்லப்படும் செயலைப் பின்பற்றினர் என்று ஹமிடி மேலும் கூறினார்.
“அவர்கள் எவ்வித இஸ்லாமியக் கல்வியையும் பெற்றிருக்கவில்லை, ஆனால் அவர்கள் தியாகிகளாக விரும்பினர்”, என்று இன்று கோலாலம்பூரில் ஒரு குரான் கற்றல் மற்றும் மனப்பாடம் செய்து ஒப்புவித்தல் நிகழ்ச்சியில் பேசுகையில் ஹமிடி கூறினார்.
தெற்கு பிலிப்பைன்ஸில் நடைபெற்ற அச்சண்டையில் கொல்லப்பட்ட 13 தீவிரவாதிகளில் அவ்விரு மலேசியர்களும் அடங்குவர் என்று நம்பப்படுகிறது.
மராவியில் கொல்லப்பட்ட இரு மலேசியகளையும் மலாய்க்காரர்கள் தியாகிகளாக போற்ற வேண்டும் என்பதற்காகவே சமயக் கல்வியை காரணம் காட்டுகிறார்.
இஸ்லாமிய சமயக் கல்வியை நன்கு அறிந்திருக்காத நீங்கள்தானே ஷாக்கிர் நாய்க் போன்ற தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறீர்கள்.
இந்த லட்சனுத்துலே மற்றவர்களை இஸ்லாமிய சமயக் கல்வியை அறிந்திராவர்கள் என நீங்கள் கூறுவது உங்களது மடத்தனம்.
இஸ்லாமிய சமயக்கல்வியை நாம் ஏன் தெரிந்து இருக்க வேண்டும்? மற்ற சமயங்களை பற்றி இவன்கள் எவ்வளவுக்கு தெரிந்து வைத்துளான்கள்?
உண்மையான இஸ்லாமியக் கல்வியை எங்கே போய் தேடுவது? அது தெரிந்து விட்டால் தீவிரவாதமே அவசியமில்லையே!
en thaai thamizh
என் கருத்தை தவறாக புரிந்து கொண்டீர்கள் என்று நினைக்கிறன்.
நான் குறிப்பிட்ட “மற்றவர்கள்” என்பது ஹமிடி குறிப்பிடும் மராவி நகரில் இஸ்லாமிய அரசு (ஐஎஸ்)தீவிரவாதிகளுக்கும் மன்னிக்கவும் நமது மலேசிய அரசாங்கத்தின் மதக்கொள்கைப்படி (ஐஎஸ்) போராளிகளுக்கும் பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு படைகளுக்குமிடையில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட இரு மலேசியர்களைதான்.