தங்களுக்குத் தெரியாமலே தங்களுடைய வாக்களிப்பு நிலையங்கள் மாற்றப்பட்டுள்ளதாக சுமார் 200 புகார்கள் கெடா, டெர்காவில் செய்யப்பட்டுள்ளன.
வாக்காளர்களை ஏமாற்றி அவர்களின் அடையாள அட்டையை எடுத்துக்கொண்ட பின்னர், அவர்களின் வாக்களிப்பு நிலையங்கள் மாற்றப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக டெர்கா சட்டமன்ற உறுப்பினர் டான் கோக் யு கூறியதாக சினார் ஹரியான் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வாக்காளர்களுக்குத் தெரியாமலே அவர்களின் வாக்களிப்பு நிலையங்களை மாற்றி அவர்களின் வாக்களிக்கும் உரிமையைப் பரிக்கும் இரு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
மாதம் ஒன்றுக்கு ரிம150 பெறுமானமுள்ள பொருள்கள் கொடுக்கப்படும் என்று கூறி வாக்காளர்களின் அடையாள அட்டைகளை எடுத்துச் செல்லப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த அடையாள அட்டைகள் மூன்று நாட்களுக்குப் பின்னர் திருப்பிக் கொடுக்கப்பட்டது என்று அவர் நேற்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
டெர்கா சமூக மையம் வாக்காளர்கள் அவர்களுக்குத் தெரியாமலே இடம் மாற்றப்படுவது பற்றி 200 புகார்களைப் பெற்றுள்ளது.
புகார் செய்துள்ளவர்களில் பெரும்பாலானோர் மூத்தவர்கள் மற்றும் முடமானவர்களாவர், குறிப்பாக இந்தியர்கள் மற்றும் இந்திய முஸ்லிம்கள், என்று டான் கூறியதாக சொல்லப்படுகிறது.
புகார் செய்தவர்களில் ஒருவரான ஜி. வேணுலோபால், 74, தாம் டெர்கா சட்டமன்ற தொகுதியிலிருந்து புக்கிட் லாடா மாநில தொகுத்திக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறினார். இவ்விரு தொகுதிகளும் போகோக் செனா நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்டதாகும்.
தமது இருப்பிடம் மற்றும் வாக்களிப்பு மாவட்டம் ஜாலான் அம்பார். அங்கிருந்து கம்போங் கொலோனுக்கு மாற்றியுள்ளனர். அது மலாய் கிராமம். தாம் இன்னும் ஜாலான் அம்பாரில் வாழ்வாதக அவர் கூறுகிறார்.
வாக்காளர்களுக்கு, குறிப்பாக மூத்த வாக்காளர்களுக்கு, தெரியாமல், அவர்களை இடமாற்றம் செய்வதை போகோக் செனா நாடாளுமன்ற உறுப்பினர் மாபுஸ் ஒமார் குறைகூறினார்.
கெடா தேர்தல் ஆணையத்தின் இயக்குனர் முன்வந்து இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாபுஸ் வலியுறுத்தியதாக சினார் ஹரியான் செய்தி கூறுகிறது.
டான் கொக் சியூ — இதெல்லாம் நம்பிக்கை நாயகனின் திருவிளையாடல்– தேர்தல் ஆணையத்துடன். எதிர் காட்சிகள் தூங்கி கொண்டிருந்தால் அதோ கதி தான். அவன் ஆட்சியை தன கையில் வைத்திருக்க இன்னும் என்ன என்னமெல்லாம் செய்வானோ?
ஆட்சியை கெட்டியாக பிடித்துக் கொள்ள தற்போதைய தேசிய முன்னணி இதுபோன்ற தில்லு முல்லுகளை செய்வது ஒன்றும் புதிதல்ல. வானையே பிளந்து கட்டுவது போல பேசும் எதிர்க்கட்சிகள் இதனை எப்படி தீர்ப்பது என்று தெரியாதா? தனது ஆட்களை வீட்டுக்கு வீடு அனுப்பி வாக்காளர்களின் நிலையினை தெளிவுப் படுத்தி கொள்ள தெரியாதா? எனக்கும் AP உண்டு, நானும் சொகுசுக் கார் வாங்கக் கூடாதா? என்கிறார் இன்றைய எதிர்கட்சிக் காரர். தனது மோரிஸ் மைனர் காரில் ஒரு டைப் ரைட்டரை வைத்துக் கொண்டு சேவை செய்தார் அன்றை எதிர்கட்சிக்காரர் லீ லாம் தாய். பி.பட்டுவுடன் வேனில் தூங்கிய அனுபவம் எனக்குண்டு. இப்போதுள்ளவர்கள் ஏறினாள் கார் (CAR), இறங்கினால் பார் (BAR).