பினாங்கு ஆர்பாட்டக்காரர்கள் இஸ்லாத்தைப் பிரதிநிதிக்கவிலை, அமனா எம்பி கூறுகிறார்

 

Norighttosaysoஜாரிங்கான் முஸ்லிமின் புலாவ் பினாங் (ஜேஎம்பிபி) முஸ்லிம்களைப் பிரதிநிதிக்கவில்லை மற்றும் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் நோன்பு துறக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக்கூடாது என்று கூறும் உரிமை அதற்கு இல்லை என்று பார்டி அமனா நெகாராவின் செப்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹனிபா மைதின் கூறினார்.

ஜேஎம்பிபி அதன் கூற்றுக்கு ஆதரவாக எந்த இஸ்லாமிய குறிப்பையும் காட்டவில்லை என்று கூறிய அவர், இது ஒரு தீவிரவாதச் செயல் என்பது தெளிவாகிறது என்பதோடு ஜேஎம்பிபியின் தலைவர் ஹஃபிஸி நூர்டின் எந்த அளவிற்கு இஸ்லாத்தைப் புரிந்துகொண்டுள்ளார் என்பதில் தமக்கு சந்தேகம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

“முஸ்லிம்கள் அவர்களைப் (ஜேஎம்பிபி) போல் கூர்மதியற்றவர்களாக இருக்கக்கூடாது”, என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை, ஜேஎம்பிபி நடத்திய ஓர் ஆர்பாட்டத்தின் போது முதலமைச்சர் லிம் நோன்பு துறக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக்கூடாது ஏனென்றால் அவர் இஸ்லாம் எதிர்ப்பாளர் என்று கூறப்பட்டது.

லிம் இஸ்லாத்தைத் தழுவினால் மட்டுமே நோன்பு துறக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரவேற்கப்படுவார் என்று ஜேஎம்பிபியின் தலைவர் ஹஃபிஸி கூறியிருந்தார்.