கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்ட த ஸ்டார் நாளிதழின் முதல் பக்கத்தில் முஸ்லிம்கள் பிரார்த்தணை செய்வதைக் காட்டும் படத்துடன் பயங்கரவாதம் பற்றிய இன்னொரு தலைப்புச் செய்தியும் வெளியிடப்பட்டிருப்பது குறித்து நாளைக்கு விளக்கம் அளிக்க வருமாறு உள்துறை அமைச்சு அந்நாளிதழின் தலைமை ஆசிரியருக்கு ஆணையிட்டுள்ளது.
இந்த விவாகாரத்தில் அந்நாளிதழ் அதிகக் கவனம் செலுத்தத் தவறி விட்டது குறித்து அமைச்சு மிகுந்த ஏமா/ற்றமடைந்திருப்பதாக அதன் தலைமைச் செயலாளர் அல்வி இப்ராகிம் கூறினார்.
“நாளைக்கு அந்த நாளிதழின் தலைமை ஆசிரியருக்கு அந்தத் தலைப்பின்கீழ் அதன் முதல் பக்கத்தில் அப்படம் வெளியிடப்பட்டது குறித்து விளக்கம் அளிக்க வருமாறு ஆணையிடுவோம்.
“அளிக்கப்பட்ட விளக்கம் போதுமானதாக இல்லை என்று அமைச்சு கருதுமானால், காரணம் கோரும் கடிதம் கொடுக்கப்படும்”, என்று அவர் செய்தியாளர்களிடம் இன்று திரங்கானுவில் கூறினார்.
அடாடா! ரம்லான் மாத ஆரம்பமே நல்ல செய்திகளாகவே வருகின்றன!
இந்த விவாகாரத்தில் அந்நாளிதழ் அதிகக் கவனம் செலுத்தத் தவறி விட்டது குறித்து அமைச்சு மிகுந்த ஏமா/ற்றமடைந்திருப்பதாக அதன் தலைமைச் செயலாளர் அல்வி இப்ராகிம் கூறினார். ஆனால் தலைமைச் செயலாளர் அல்வி இப்ராகிம் அவர்களுக்கு 200 க்கும் மேற்பட்ட புகார்கள் செய்தும் அவர் அமைச்சின் கீழ் உள்ள காவல் துறைக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை?
அண்மைய காலமாக இந்து மதத்தை இழிவு படுத்தும் வகையில் சில இஸ்லாமிய மத போதகர்கள் பேசியிருப்பது தொடர்பில் அவர்களுக்கு எதிராக 200 க்கும் மேற்பட்ட புகார்கள் செய்தும் இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காதது வேதனையை தருகிறது – மலேசிய இந்து சங்க தேசியத் தலைவர் டத்தோ மோகன் ஷான்
அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின்போது மலேசியாவிலுள்ள அனைத்துலக விமான நிலையம் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு TRANSIT PIONT-டாக விளங்குகிறது என அனைத்துலக பத்திரிக்கைகள் தனது தலையங்கத்தில் மலேசிய வரைபடத்துடன் மலேசிய வர்ண கொடியையும் பிரசுரித்து செய்தி வெளியிட்டதை விடவா த ஸ்டார் மோசமாக செய்தி வெளியிட்டிருக்கிறது.
அப்போது ஆரம்பத்தில் உள்துறை அமைச்சு முதல் அப்போதைய பிரதமர் வரை எதிர்ப்பு என்ற பெயரால் வாயால் முணுமுணுத்து விட்டு பிறகு அது உண்மையே என்று விழி பிதுங்கி ஒப்பு கொண்டதையுமா உள்துறை அமைச்சு மறந்து விட்டது அல்லது மக்கள் மறந்து விட்டார்கள் என்று நினைப்பில் இப்போது பிலிம் காட்டுகிறதா ?
நேற்று உள்துறை அமைச்சரே இறந்தவர்கள் மலேசியர்கள்தான் உறுதி செய்தது மட்டுமில்லாது இஸ்லாமிய சமய அறிவு இல்லாதவர்கள் என மறைமுக வக்காலத்து வாங்கியதையும் அல்லவா உள்துறை அமைச்சு மறந்து விட்டது.
உள்துறை அமைச்சில் பணிபுரிபவர்களுக்கும் ஞாபக மறதி ஆட்கொண்டிருப்பதால் இப்பொழுதே வைத்தியர்களை நாடுவது நல்லது.
இது தான் Malaysia இரட்டை வேடம்