சில டிஏபி தலைவர்கள் அம்னோ தலைவர்களுடன் “கைகோத்து” நிற்கிறார்கள். அதைப் பார்க்கும் எவரும் அம்னோவும் டிஏபியும் ஒத்துழைப்பதாகக் கூறுவதில்லை.
“ஆனால், பாஸ் தலைவர்கள் அம்னோ தலைவர்களுடன் அரசாங்க நிகழ்வொன்றின்போது ஒன்றாக அமர்ந்து தேநீர் அருந்துவதுபோல் படங்கள் வெளிவந்தால் உடனே அவர்கள் அம்னோவுடன் சேர விரும்புவதாகக் கதை கட்டி விடுகிறார்கள்.
“ஆனால், டிஏபி தலைவர்கள் தேநீர் அருந்துவது மட்டுமல்ல (அம்னோ தலைவர்களுடன்) கட்டிப்பிடித்து ஆடினாலும் பாதகமில்லை”, என என ஆதங்கத்துடன் குறிப்பிட்டார் பாஸ் உதவித் தலைவர் இட்ரிஸ் அஹ்மட்.
இட்ரிஸ் யாருடைய பெய்ரையும் கூறவில்லை. ஆனால், அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கிடையிலும் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கும் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அசீசுக்கும் நெருக்கமாக நட்பு கொண்டிருப்பதைத்தான் அவர் குறிப்பிடுகிறார் என்று நம்பப்படுகிறது.
அவ்விருவரும் கடந்த ஆண்டு ஸ்கைவாக் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் கைகோத்து நின்றனர்.
மறுபுறம், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் இம்மாதத் தொடக்கத்தில் விவசாய, விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்றுக்குச் சென்றிருந்தார். உடனே, பாஸ் அம்னோவுடன் ஒத்துழைக்கிறதா என்று கேள்விகளும் சந்தேகங்களும் எழுப்பப்பட்டன.
ஏன் இந்த இரட்டை நியாயம் என்றவர் வினவினார்.
Pas தலைவரே! DAP நல்ல கட்சி. அதிலுள்ளவர்கள் தான் ஒரு சிலர் திருட்டுப் பயல்கள். குறிப்பாக, இந்த மவன்(லிம் குவான் எங்) ஹாங் காங்கிலும், சைனாவிலும் நிறைய சொத்து சேர்த்து விட்டான். போதாதென்று, யாராவது பாதி விலைக்கு பங்களா விற்பார்களா என்று அலைந்து கொண்டிருக்கிறான். அப்படி செய்து, இப்போது மாட்டிக் கொண்டான். முன்னைய DAP தலைவர்கள் கட்சிக்காக பாடுபட்டு நிறைய தங்களது சொத்துக்களை இழந்திருக்கிறார்கள். இப்போதுள்ளவர்கள் பெரும்பாலோர் சந்தர்ப்பவாதிகள். அண்மைய சரவாக் சட்டமன்ற தேர்தலின்போது சரவாக் மாநிலத்தில் எந்த எதிர்க்கட்சி காரர்களையும் உள்ளே நுழைய விடவில்லை. ஆனால் அப்பனையும் (லிம் கிட சியாங்)மவனையும் மட்டும் எப்படி உள்ளே விட்டார்கள். எதிர்கட்சிகளை சின்னாபின்னமாக உடைக்கவே இவர்கள் உள்ளே நுழைந்தார்கள்.
அரசியல் வேறு, நாட்டு நலன் வேறு ! நாட்டு நலனுக்காக கட்சி
பேதமில்லாமல் அனைவரும் ஒன்று சேர்வது நன்மைதான். ; ஆனால்
இந்த நாகரீகத்தை பாஸ் போன்ற மத வெறியர்களுக்கு புரிய வைக்க
முடியாது.