கடந்த சனிக்கிழமை வெளியிட்ட முதல் பக்கச் செய்திக்காக ஸ்டார் நாளேட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் என ஜோகூர் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கோரிக்கை விடுத்தார்.
இவ்வாறு கோரிக்கை விடுத்த அம்னோ கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினரான தெங்கு புத்ரா ஹருன் அமினுர்ரஷிட், அந்நாளேட்டின் உரிமையாளர்கள் “இஸ்லாம் தொடர்பான செய்திகளை நல்ல முறையில் கண்காணிப்பதற்கு ஏதுவாக இப்போதுள்ள செய்தி நிர்வாகத்தைத் திருத்தி அமைக்கவும் வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.
நாளேடு “மாநில அமைதிக்கு எதிராக செயல்பட்டிருக்கிறது, அதன் செயல் பொது ஒழுங்கைக் கெடுத்து விடலாம்”, என்றும் தெங்கு பெட்ரா கூறிக்கொண்டார்.
சனிக்கிழமை த ஸ்ரார் ‘மலேசிய பயங்கரவாதத் தலவர்’ என்பதைத் தலைப்புச் செய்தியாக போட்டு அதன்கீழ் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் படமொன்றையும் வெளியிட்டிருந்தது.
இதன் தொடர்பில் அதனிடம் விளக்கம் கேட்க உள்துறை அமைச்சு அந்நாளேட்டைக் கூப்பிட்டு அனுப்பியுள்ளது.
தி ஸ்டார் தலைப்பு செய்தியும்+படமும் தத்ரூபமாக அமைந்துள்ளது.
ஆசிரியருக்கு பாராட்டுக்கள்.
ஸ்டார் நாளேட்டை தடை செய்யும் அளவிற்கு என்ன நடந்தது !
மத பற்று பத்திரிகை அறத்தை விழுங்க பார்க்கிறதோ !
கம்யூனிச நாடுகளுக்கும் இந்த மத நாடுகளுக்கும் என்ன வித்தியாசம்?
பரிசானின் பினாமிகளினால் ஆக்கிரமித்து இருக்கும் நாளேடு தி ஸ்டார்.
ஆகவே, தி ஸ்டார் நாளிதழில் இப்படிப்பட்ட தலைப்பு செய்தியும்+படமும் வெளியிட்டு, பிறகு இஸ்லாத்தை பாதுகாக்க பரிசானின் பினாமிகளானாலும் பரிசான் நடவடிக்கை எடுக்க தயங்காது என பிலிம் காட்டி மலாய்க்காரர்கள் ஓட்டுக்களை கவரும் பரிசானின் தந்திரமாகவும்கூட இருக்கலாம்.
பரிசானின் பினாமிகளினால் ஆக்கிரமித்து இருக்கும் நாளேடு தி ஸ்டார்.
ஆகவே, தி ஸ்டார் நாளிதழில் இப்படிப்பட்ட தலைப்பு செய்தியும்+படமும் வெளியிட்டு, பிறகு இஸ்லாத்தை பாதுகாக்க பரிசானின் பினாமிகளானாலும் பரிசான் நடவடிக்கை எடுக்க தயங்காது என WAYANG KULIT காட்டி மலாய்க்காரர்கள் ஓட்டுக்களை கவரும் பரிசானின் தந்திரமாகவும்கூட இருக்கலாம்.
எப்படியாயினும் தலைப்பு செய்தியையும் அதற்கு தகுந்தால்போல் படத்தையையும் வெளிட்ட ஆசிரியரை பாராட்டியே ஆக வேண்டும்.