ஊழலுக்கு எதிரான எம்ஏசிசியின் போராட்டம் 1எம்டிபியையும் உள்ளிட்டிருக்க வேண்டும்

chandraஊழலுக்கு  எதிரான   போராட்டத்தை   முடுக்கி  விட்டிருக்கும்   மலேசிய    ஊழல்தடுப்பு   ஆணைய(எம்ஏசிசி)த்தைப்   பாராட்ட    வேண்டும்   என்கிறார்   யாயாசான்  1மலேசியா   அறங்காவல்  வாரியத்    தலைவர்  சந்திரா  முஸாபார்.

கிட்டத்தட்ட   ஒவ்வொரு    நாளும்   அரசாங்க   உயர்   அதிகாரிகள்  பிடிபடுவது   பற்றியும்   அமலாக்க    அதிகாரிகள்   நீதிமன்றத்தில்    நிறுத்தப்பட்டுக்  குற்றம்  சாட்டப்படுவது   பற்றியும்      செய்திகள்   வருகின்றன.

இது  எம்ஏசிசி     ஊழலை  ஒழிக்கக்  கங்கணம்  கட்டிக்கொண்டிக்கிறது     என்ற   எண்ணத்தை    ஏற்படுத்துகிறது.

அந்த   எண்ணம்   உண்மை    என்றால்   அது   1எம்டிபி    வழக்கை  மறுபடியும்   திறந்து    பார்க்க   வேண்டும்.

நமது   எல்லைக்கப்பால்   வெளிக்கிளம்பியுள்ள    சான்றுகளை   அது  கையிலெடுக்க   வேண்டும்.

தேவையென்றால்  வழக்கு  தொடுக்குமாறு    சட்டத்துறை    தலைவரிடம்   பரிந்துரைக்க     வேண்டும்.  நம்   நீதித்துறை    நீதியின்   காவலன்   என்ற  முறையில்   நீதி  நிலைநாட்டப்படுவதை   உறுதிப்படுத்த   வேண்டும்.

1எம்டிபி-இன்   நடவடிக்கையில்   நேர்மை    மிளிர   வேண்டும்.  அப்போதுதான்  அதிகாரத்தில்      உள்ளவர்கள்    ஊழைலை  ஒழிப்பதில்    உண்மையிலேயே   அக்கறை   கொண்டிருக்கிறார்கள்     என்பதை   மக்கள்    நம்புவார்கள்    என்றாரவர்.