என்னை நஜிப்புடன் ஒப்பிடாதீர்கள்: மகாதிர் வலியுறுத்து

dr mமுன்னாள்   பிரதமர்   டாக்டர்   மகாதிர்  முகம்மட்,   தம்மைத்    தம்மால்   உருவாக்கப்பட்டவரான    பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்குடன்   ஒப்பிட க்  கூடாது    என்றார்.

“என்னை  நஜிப்புடன்   ஒப்பிடாதீர்கள்.  நான்   எவ்வளவோ  விசயங்களுக்கு      இடமளித்தேன்,  கட்சியினர்   என்னை     எதிர்ப்பதற்குக்கூட   அனுமதித்தேன்.

“அப்படிப்பட்டவர்களை   நஜிப்   வெளியேற்றுவார்.   அவருடன்   ஒத்துபோகாதவர்களை     நீக்கி  விடுவார்”,  என     மகாதிர்   பைனான்சியல்   டைம்ஸுக்கு   அளித்த   நேர்காணலில்   கூறினார்.

அவரை   நேர்காணல்    செய்த    செய்தியாளர்,    மகாதிர்    பிரதமராக   இருந்த   காலத்திலும்    அப்படித்தானே     செய்தார்   என்பதைச்    சுட்டிக்காட்டியபோது     மகாதிர்  அதைப்  புறக்கணித்து     பேச்சைத்     தொடர்ந்தார்.

தாம்   பணம்   திருடவில்லை     என்றார்.

“என்  சம்பளமே   எனக்குப்   போதுமானதாக   இருந்தது”.

தாம்  பிரதமர்   பதவியிலிருந்து   விலகியபோது      2020-இல்   மேம்பாடடைந்த    இலக்கை   நோக்கி   நாடு    சென்று   கொண்டிருந்தது   என்றவர்  சொன்னார்.

“ஆனால், அந்த   இலக்கை    அடைய   அவர்களால்    முடியாது”,  என்று  மகாதிர்   கூறினார்.

இப்போது   பார்டி   பிரிபூமி   பெர்சத்து  மலேசியா  (பெர்சத்து) -வின்   நிர்வாகத்   தலைவராகவுள்ள   மகாதிர்,   2015-இலிருந்து      நஜிப்   அரசாங்கத்தையும்    1எம்டிபி-யையும்    கடுமையாகக்   குறைகூறி   வருகிறார்.

நஜிப்பை    ஆட்சியிலிருந்து   அகற்றும்   முயற்சியில்     அவர்   தம்  முன்னாள்   அரசியல்   எதிரிகளுடன்   கைகோத்து    செயல்படுகிறார்.  அவருடைய    கட்சியும்   டிஏபி,    பிகேஆர்,  அமனா    ஆகியவற்றின்   கூட்டணியான    பக்கத்தான்   ஹராபானில்    சேர்ந்து   கொண்டிருக்கிறது.

“கடந்த  காலத்தில்     என்ன   நடந்ததோ,  இப்போது   அது   தேவையில்லை.  நான்    அவர்களுடன்   இணைந்து   வேலை    செய்ய    ஆயத்தமாக    உள்ளேன்.  அவர்களும்    என்னுடன்   சேர்ந்து  உழைக்கத்   தயராக     இருக்கிறார்கள்.  எங்களின்   நோக்கம்   ஒன்றுதான் –அரசாங்கத்தைக்  கவிழ்ப்பது”,  என  மகாதிர்   குறிப்பிட்டார்.