த ஸ்டார் ஆசிரியர்கள் உள்துறை அமைச்சுக்கு வந்தனர்

 

Stareditorsinministryத ஸ்டார் நாளிதழின் நான்கு ஆசிரியர்கள் இன்று உள்துறை அமைச்சுக்கு வந்திருந்தனர். அந்நாளிதழின் சனிக்கிழமை பதிப்பின் முதல் பக்கம் சம்பந்தப்பட்ட விவகாரத்திற்கு, நாட்டிலுள்ள முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்களிக்கத் தவறியது, விளக்கம் அளிக்க அவர்கள் வந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

அந்நால்வரும், நாளிதழின் தனித்துறை நிபுணத்துவ ஆசிரியர் எம். சண்முகம் மற்றும் மூன்று செயல்முறை ஆசிரியர்கள், பிரையன் மார்டின், துரைராஜ் நடேசன் மற்றும் ரோஸைட் அப்துல் ரஹ்மான், அமைச்சிற்கு காலை மணி 10.50 க்கு வந்து சேர்ந்தனர். ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் அங்கிருந்து புறப்பட்டனர்.

அவர்களுக்காக காத்திருந்த ஊடக உறுப்பினர்கள் அவர்களைச் சந்திக்க இயலவில்லை. அவர்கள் வேறொரு கதவின் வழி வெளியாகி விட்டனர்.

நேற்று, உள்துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் அல்வி இப்ராகிம் கடந்த சனிக்கிழமை த ஸ்டாரின் முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்து படம் மற்றும் தலைப்புச் செய்தி குறித்து விளக்கம் அளிக்க அதன் ஆசிரியர் அழைக்கப்பட்டிருப்பதாக கூறியிருந்தார்.