த ஸ்டார் முதல் பக்கம் உணர்ச்சியற்றதே தவிர தேசநிந்தனையானதல்ல

 

TheStarinsensitivenotseditiousத ஸ்டார் நாளேடு அதன் முதல் பக்கத்தில் முஸ்லிம்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த படத்தையும் “மலேசிய பயங்கரவாதத் தலைவர்” என்ற மற்றொரு செய்தித் தலைப்பையும் வெளியிட்டிருந்தது ஓர் உணர்சியற்ற செயலாகும். அதற்கு தேசநிந்தனைச் சட்டத்தின்கீழ் விசாரணை மேற்கொள்ள வேண்டியதில்லை என்று கெராக்கான் ஹாபுஸ்கான் அக்தா ஹாசுதான் (ஜிஎச்எஎச்) கூறிகிறது.

த ஸ்டார் மன்னிப்பு கோரியுள்ளது. ஆகவே, த ஸ்டாருக்கு எதிராக போலீஸ் கிரிமினல் விசாரணையை மேற்கொள்ள வேண்டிய தேவை இல்லை என்று ஜிஎச்எஎச் கருதுகிறது.

அந்நாளேடு உணர்ச்சியற்றதோடு அறிவுக்கு ஒவ்வாததைச் செய்திருக்கலாம். ஆனால் அதை ஒரு கிரிமினல் குற்றமாகக் கருதி தேசநிந்தனைச் சட்டத்தின்கீழ் விசாரிக்க வேண்டும் என்பதை ஜிச்எஎச் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அதன் ஒருங்கிணைப்பாளர் அனிர் அப்துல் ஹாடி ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

தேசநிந்தனைச் சட்டம் மலேசிய நாடாளுமன்றத்தால் உருவாக்கப்படாத ஒரு பண்டைய காலத்துச் சட்டம் என்று அவர் மேலும் கூறினார்.

ஆகவே, இக்கொடுமையான சட்டத்தை பிரதமர் நஜிப் வாக்களித்தவாறு அகற்ற வேண்டும் என்ற ஜிஎச்எஎச்சின் கோரிக்கையை அமிர் மீண்டும் புதுப்பித்தார்.