புரோட்டோன் குழந்தையை வரிசெலுத்துவோர் தாங்கும் நிலை வரவே வராது- ஜொகாரி உத்தரவாதம்

babyஇதற்குமேலும்    புரோட்டோன்   நிறுவனத்தை    நடத்துவதில்    அரசாங்கத்துக்குத்   துளியும்   விருப்பமில்லை   என்கிறார்   இரண்டாம்   நிதி  அமைச்சர்   ஜொகாரி   அப்துல்  கனி.

சீனாவின்    கீலி    ஆட்டோமோபில்   ஹோல்டிங்க்ஸுடன்      செய்துகொள்ளப்பட்டுள்ள   ஏற்பாட்டின்படி       சத்துக்கள்   எல்லாம்  உறிஞ்சப்பட்டு    புரோட்டோன்   வெறும்  “சக்கையாக”    அரசாங்கத்திடம்   மீண்டும்   திரும்பி  வரும்    என்று    டிஏபி-இன்  பெட்டாலிங்   ஜெயா    எம்பி   டோனி   புவா  கூறியிருப்பதற்கு      ஜொகாரி   அவ்வாறு   மறுமொழி   அளித்தார்.

கீலியும்   டிஆர்பி -ஹைகோமும்    புரோட்டோனில்   மேன்மேலும்   முதலீடு   செய்ய   வேண்டாம்  என்ற  முடிவுக்கு   வரும்   பட்சத்தில்   அந்நிறுவனத்தால்   அரசாங்கத்திடம்   எளிய  நிபந்தனைகளில்    பெறப்பட்ட   ரிம1.5 பில்லியன்   கடனைத்   திருப்பிச்   செலுத்த   முடியாத   நிலை   ஏற்பட்டு   புரோட்டோன்   மீண்டும்   அரசாங்கத்தின்    கைக்கே   வந்து   சேரும்    என்று   புவா   கூறினார்.

இதன்   தொடர்பில்   மலேசியாகினி    ஜொகாரியைத்   தொடர்புகொண்டு   கருத்துக்   கேட்டதற்கு,  “ரிம1.5 பில்லியன்   கடன்   முழுமையாக  திரும்பக்  கிடைப்பதை    உறுதிப்படுத்துவோம்”,  என்றார்.

“மறுபடியும்   புரோட்டோனை    ஏற்றுநடத்தும்  விருப்பம்   அரசாங்கத்துக்கு  இல்லை”,  என்று    குறிப்பிட்டார்.