ஒரு விஐபி-இடம், விசாரணையில் உள்ள ஒரு வழக்கைக் கைவிடுவதற்குப் பேரம் பேசி அதற்காகக் கையூட்டும் பெற்றதாக சந்தேகிக்கப்படும் ஓர் ஆடவரை மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.
54-வயதுடைய அந்நபர், ரிம70,000 கொடுத்தால் அந்த விஐபிக்கு எதிரான வழக்கை ஒன்றும் இல்லாதபடி செய்துவிட முடியும் என்று கூறியிருந்தார் என எம்ஏசிசி கூறியது.
அந்நபருடன் அந்த விஐபியும் 20ஆயிரம் ரிங்கிட்டுடன் நேற்றிரவு தங்குவிடுதி ஒன்றில் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது.
அவர்கள் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்திய எம்ஏசிசி துணை இயக்குனர் (நடவடிக்கைகள்) அஸாம் பாக்கி இது ஒரு கடுமையான விவகாரம் என்றார்.
“இப்படி ஒரு சம்பவம் நிகழ்வது இது முதல்முறை அல்ல. கடந்த காலங்களிலும் எம்ஏசிசி பெயரைப் பயன்படுத்திக் கையூட்டு பெற எத்தனித்த பலருக்கு எதிராக எம்ஏசிசி நடவடிக்கை எடுத்துள்ளது”, என்றவர் சொன்னார்.
“இது எம்ஏசிசி-இன் களங்கப்படுத்தும் செயலாகும்”, என்று குறிப்பிட்ட அவர், எம்ஏசிசி இப்படிப்பட்ட விவகாரங்களில் விட்டுக் கொடுக்காது என்றார்.
லஞ்சத்தில் ஈடுபடுவோரை கைது செய்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அநியாயம். அப்புறம் பொதுச்சேவையில் நமது நாட்டில் ஒரு பயலும் இருக்க மாட்டான்.
வழக்கமான கோணல் புத்தி
நண்பர் சிங்கம் கூறுவதும் உண்மைதான். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் சில தமிழர்களும்,சீனர்களும் பணியில் இருந்தார்கள். இப்பொழுது நிலை வேறு அய்யா!