சுபாங் எம்பி சிவராசா ராசையாவைப் பேசுவதற்கு அனுமதித்த சுபாங் பள்ளிவாசலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சிலாங்கூர் சுல்தான் மாநில சமய விவகாரத் துறை(ஜயிஸ்)யைப் பணித்துள்ளார்.
சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷாவின் தனிச் செயலாளர் முனிர் பானி வழியாக அவ்வுத்தரவு வந்தது என ஜயிஸ் இயக்குனர் ஹரிஸ் காசிம் கூறினார்.
“நேற்று சுல்தான் சலாஹுடின் அப்துல் அசீஸ் ஷா பள்ளிவாசலில் நோன்பு துறப்பு நிகழ்வில் உரையாற்றிய சிலாங்கூர் இஸ்லாமிய மன்றத் தலைவர் முகம்மட் அட்ஸிப் முகம்மட் இசா கூறியதுபோல் அதிகாரமற்ற பேச்சாளர்கள் பேசுவதற்கு அனுமதிக்கக்கூடாது என்ற விதிமுறையை எல்லாப் பள்ளிவாசல்களுமே பின்பற்ற வேண்டும்”, என்று ஹரிஸ் கூறியதாக நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் செய்தி தெரிவித்தது.
சிவராசா சுபாங் கம்போங் மலாயு மஸ்ஜித் அன் -நூரில் அப்பள்ளிவாசலின் உதவிக்காக ரிம71,000 காசோலை வழங்கிய நிகழ்வில் உரையாற்றினார்.
தம்முடைய உரை அரசியல் செராமா அல்ல என்று குறிப்பிட்ட அவர், சிலாங்கூர் அரசு பள்ளிவாசல்களின் நலனுக்காக செய்து வரும் காரியங்களை மட்டுமே அதில் விவரித்ததாகக் கூறினார்.
சுபாங் எம்பி சிவராசா ராசையாவுக்கு நேரம் சரியில்லையோ..திரும்பும் இடமெல்லாம் தாக்குதல்கள்..
சுல்தான் இன்னொரு ஆணையையும் வெளியிட வேண்டும். இது போல அரசியல்வாதிகளிடம் கையேந்துவது நிறுத்தப்பட வேண்டும்!
சிவராசாவை பேச அனுமதித்தவர் மீதுதான் நடவடிக்கை எடுக்கவேண்டுமே ஒழிய, சிவராசா மீது அல்ல. சுல்தானின் நடவடிக்கை சரியே. முஸ்லீம் அல்லாதவர்களின் வரிப்பணமும் பள்ளிவாசல்களுக்கு செல்லாமல் செய்தால் நன்றாய் இருக்குமே.
ஐயா சிவராசா உமக்கு ஏனய்யா இந்த வேலை ! நாட்டில் எதை பேசுகிறோம் என்பதை விட , யாரிடம் பேசுகிறோம் என்பதே முக்கியம் !பாத்திரம் அறிந்து பிச்சை போடு என்பார்கள் , தமிழில் படித்ததில்லையா ! உமது கட்சியை சேர்ந்த யாராவது ஒரு முஸ்லிமிடம் அந்த காசோலையை கொடுத்து விட்டிருக்கலாமே ! போகாத இடம் தன்னில் போக வேண்டாம் என்பது பழமொழி ! ஒரு இந்துவுக்கு பள்ளி வாசலில் என்ன வேலை ! நாம் இன்னும் அந்த அளவுக்கு மனித நேயத்தோடு வாழ கற்று கொள்ளவில்லை ! நல்லது செய்தலும் அவர்களுக்கு அது தப்பாகத்தான் தெரியும் ! மத வெறியும் ,இன வெறியும் நம்மை அடக்கி வாசிக்க பணிக்கிறது ! இந்து ஆலயங்களுக்கு போங்கள் ! தேவாலயங்களுக்கு போங்கள் ! உம்மை யாரும் கேள்வி கேட்க்க மாட்டார்கள் ! புத்தியோடு பிழைத்து கொண்டால் சரி !!
நண்பர் சிங்கம் அவர்களே. இவர்களுக்கு கோழி முட்டை தேவை.ஆனால் கோழியின் மூலமாக வரக்கூடாது. இப்படிப்பட்ட சிந்தனை உள்ளவர்களால் தான் சமய, இன பிரச்சனைகள் உருவெடுக்கின்றன.
ஹஹஹஹஹ– ஐயா singam அவர்களே அது நடக்குமா? தேசிய பள்ளிவாசல் கட்டுவதற்கு சீனர்களும் இந்தியர்களும் எவ்வளவு நன்கொடை கொடுத்தார்கள் என்று இவ்வளவு பேசும் ஈனங்களுக்கு தெரியுமா?
நம்பிக்கை நாயகனையும், கோவில்களுக்குள் அனுமதிக்கக்கூடாது.
இது சிறந்த முடிவுதான் இருப்பினும் இதைப்போன்று மற்ற மதத்தினர் நமது கோவில்களுக்குள் நுழைவதை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவோர் தாங்களும் பின்பற்றுவது சிறப்பாகும்.முதலில் ஆலயங்களில் அரசியல் பேசுவதை நிறுத்துங்கள்.அவர்களிடம் கையேந்துவதையும் நிருத்துங்கள்.நமக்கெல்லாம் அறிவுரைகள் க்குரியது போதும் மற்ற இனத்தவர்கைளின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க கற்றுக்கொள்வது சிறப்பாகும்.