இரண்டு முறை தோற்றாலும் இமயத்தை வெல்வதில் உறுதியாக இருக்கிறார் ஜேம்ஸ் லீ

climbவயதானாலும்  மனம்  தளராதவர்   இந்த  மலேசிய  மலையேறும்   வீரர்.    இமயத்தில்   வெற்றிக்கொடி   நாட்டும்   அவரது   இரண்டாவது   முயற்சியை     கடும்  நெஞ்சு   வலியால்  கைவிட   நேர்ந்தாலும்  அடுத்த   ஆண்டில்   மீண்டும் முயன்று   இமயத்தின்    உச்சியை   வெற்றிகொள்ள    உறுதி   கொண்டிருக்கிறார்.

69-வயதான  ஜேம்ஸ்   கீ  சொங்   மெங்,  இமயத்தில்   ஏற   இரண்டாவது   வாய்ப்பு   கிடைத்தும்   சாதிக்க  முடியாது    போயிற்றே   என்ற   ஏமாற்றத்தில்   நேற்றிரவு   நாடு   திரும்பினார்.  நெஞ்சு  வலியுடனும்   மலையேற   அவருக்கு  ஆசைதான்.  ஆனால்,  உடனிருந்த   ஷெர்பாக்கள்  தடுத்து  விட்டனர்.  இவரும்   மற்றவர்களுக்கு   நம்மால்  தொல்லை   வேண்டாம்   என்று   எண்ணி  முயற்சியைக்  கைவிட்டார்.

கடந்த   ஆண்டு     அவர்   முதல்முறையாக   இமய  மலை  ஏறும்  முயற்சியை   மேற்கொண்டு  மலையேற்றத்தின்    இறுதிக்  கட்டமாக   மூன்றாவது  முகாமை     அடைந்தபோது (7,200  மீட்டர்  உயரத்தில்)   மோசமான   வானிலை   குறுக்கிட்டது.   மொத்த    மலையேற்றமும்   இரத்தானது.

இப்போது  இரண்டாவது   தடவை  முயன்றபோது   இப்படி.

“உண்மையைச்  சொல்ல   வேண்டுமானால்,  மிகவும்    ஏமாற்றமடைந்துள்ளேன்.   இதற்குமுன்   எனக்கு   உடல்நலக்  கோளாது    எதுவும்   வந்ததில்லை.  மலையேற்ற   நோய்   எல்லாம்  கிடையாது.  ஆனால்,  திடீரென்று   வந்து  விட்டது”,  என  லீ,    தமக்கு   வந்த   நெஞ்சு  வலி   பற்றிக்  குறிப்பிட்டார்.

இரண்டுமுறை   முயற்சி   நிறைவேறாவிட்டாலும்   மனம்   தளர்ந்து   விடவில்லை  லீ.  வாய்ப்பு  கிடைத்தால்   மறுபடியும்    இமயமலைக்குப்  பயணமாக   தயாராக   வுள்ளார்.
அவருடைய   இரண்டாவது   மலையேறும்   பயணத்துக்கு    ஏற்பாடு   செய்தவர்களில்  முக்கியமானவர்கள்    போர்ட்  டிக்சன்  அரிமா   சங்கத்தினர்.  அச்சங்கத்தின்   உதவித்   தலைவரும்    அதன்   ஏற்பாட்டுக்குழுத்    தலைவவருமான    ஒத்மான்  அப்துல்   ரசாக்   நேற்று   லீயை   வரவேற்பதற்காக      கோலாலும்பூர்  அனைத்துலக    விமான   நிலையத்துக்கு   வந்திருந்தார்.

பயணம்  வெற்றிபெறவில்லை   என்றாலும்   லீயின்  முயற்சியை    அவர்   பாராட்டினார். போர்டி  டிக்சன்   அரிமா   சங்கம்   லீயின்   அர்ப்பணிப்பு  உணர்வை  எண்ணி   பெருமிதம்  கொள்கிறது    என்றார்.  லீ  பாதுகாப்பாக   நாடு   திரும்பினாரே   அதுவே,  பெரிது   என்றார்.

லீயின்  மூன்றாவது  முயற்சிக்கும்   அவரது   சங்கம்   உதவுமா?  அது  குறித்து  விவாதிக்க   வேண்டும்.  ஏனென்றால்  பெரும்பணம்   தேவைப்படும்    என்றார்.

லீயின்  பயணத்துக்கு   ரிம 300,000  ஒதுக்கப்பட்டதாம்.

–பெர்னாமா