தமிழ்ப்பள்ளிகளில் அமுலாக்கப்பட்டு வரும் இருமொழிப் பாடத்திட்டம் கல்வி அமைச்சின் விதிகளுக்கு அப்பாற்பட்டு இருப்பதாகவும், அதன் அமுலாக்கம் அரசாங்க விதிகள், அரசாங்க கல்விக் கொள்கை மற்றும் அரசமைப்புச் சட்டத்திற்கு முரண்பாடாக இருப்பதாக கூறும் மூவர் இன்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முன்வந்துள்ளனர்.
முதல் கட்டமாக, பெட்டா லிங் ஜெயாவில் உள்ள விவேகானந்தா தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி பங்கிணியம்மாள் அவர்களுக்கு இன்று முன்னறிவிப்புக் கடிதம் வழங்கப்பட்டது.
விவேகானந்தா தமிழ்ப்பள்ளியின் பள்ளி மேலாளர் வாரியமும் அந்தப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் இந்த சட்ட நடவடிக்கைக்கு முழுமையான ஆதரவை தந்துள்ளனர். அதோடு இந்தச் சட்ட நடவடிக்கையை முன்னெடுப்பதில் சைல்டு எனப்படும் குழந்தை தகவல் கல்வி மேம்பாட்டு மையத்தின் அறங்காவலரும் வழக்கறிஞருமான கா. ஆறுமுகம், பள்ளி வாரியத்தின் தலைவர் மருத்துவர் செ. செல்வம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் நா. இராஜரத்தினம் ஆகியோர் இந்த சட்ட நடவடிக்கையை எடுக்க முனைந்துள்ளார்கள். வழக்கறிஞர்கள் தினகரன் பத்துமலை மற்றும் ஆர். பாலமுரளி ஆகியோர் இவர்களைப் பிரதிநிதிக்கின்றனர்.
இதற்கு முன்பாக கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி, அந்தப் பள்ளிக்கு இருமொழிப் பாடத்திட்டதின் கீழ் அறிவியல் மற்று கணிதப்பாடங்கள் ஆங்கில மொழியில் போதிக்கப்படுவது அரசாங்க விதிமுறைகளுக்கு முரணாக உள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டது. அதோடு கல்வி அமைச்சின் துணை இயக்குனரின் கடித நகலும் அனுப்பப்பட்டது. அவற்றின் அடிப்படையில் அந்தத் திடடத்தை கைவிடும்படி கேட்டு கொள்ளப்பட்டது. அதற்கான தக்க நடவடிக்கயை தலைமை ஆசிரியர் எடுக்க வில்லை.
பெற்றோர் ஆசிரியர் சங்கமும் மேலாளர் வாரியமும் இணைந்து இந்த இருமொழித் திட்டத்தை அகற்ற கோரியும், பள்ளியின் தலைமை ஆசிரியர் அதற்கு செவிசாய்க்கவில்லை.
அடுத்த கட்டமாக சா அலாம் உயர்நீதிமன்றத்தில் நீதி மறுசீராய்வு மனு ஒன்றை தாக்கள் செய்ய த தமக்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளதாக ஆர். பாலமுரளி தெரிவித்தார். மேலும், “இந்த நீதி மறுசீராய்வு வழக்கில் தலைமை ஆசிரியர் மற்றும் கல்வி அமைச்சின் இயக்குனரையும் இணைப்போம்”, என்றாரவர்.
இன்றைய நிகழ்ச்சியில் மே 19 இயக்கதின் தியாகு, கௌத்தம், தமிழ் இணியன் உட்பட ஆதரவாளர் இராஜ் மற்றும் மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத்தின் தலைவர் நாக பஞ்சு ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்ப்பள்ளி என்பது தமிழ்மொழி வழி கல்வியை வழங்கும் தளமாக இருக்க வேண்டும். எனவே குழந்தைகளின் அறிவாற்றலுக்கும் தமிழ்ப்பள்ளிகளின் நிலைத்தன்மைக்கும் மிரட்டலாக இருக்கும் இருமொழித் திட்டத்தை தமிழ்ப்பள்ளிகள் அமுலாக்கம் செய்யக்கூடாது என்று மே 19 இயக்கம் வலியுறுத்துகிறது என்கிறார் கௌத்தம். “அவ்வகையில் இவ்வியக்கம் தார்மீக உணர்வோடு தமிழ்ப்பள்ளிகளைப் காப்பதற்கும் மீட்பதற்குமான சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் என்றார்”, அந்த இயக்கத்தின் முன்னனி தொண்டர் தமிழிணியன்.
நம் அரசியல் தலைவர்கள் ( கூஜாக்கள்) எல்லாம் என்ன ஆனார்கள்? எதிர்வரும் தேர்தலில் நாட்காலிகள் காணாமல் போய்விடும் என்ற அச்சத்தில் நம்பிக்கை நாயகன் / நாயகி இருவருக்கும் சேவை செய்து கொண்டிருக்கிறார்களா? அல்லது தேர்தல் காலத்தில் மக்களை ஏமாற்ற வட்ட மேசை கூட்டம் போட்டு திட்டம் தீட்டுகிறார்களா? வழக்கம் போல அரசாங்கம் இந்தியர்களுக்கான ” புளூ பிரிண்ட்” தயாரித்து விட்டது. அடுத்த 15 வது தேர்தல் வரை செயல்படாமல் பேச்சு வார்த்தையில் நின்று,அமர்ந்து.படுத்து,தூங்கி மீண்டும் எழும்.