அமனா: 1எடிபி விவகாரத்தில் சிங்கப்பூரின் நடவடிக்கை கண்டு மலேசியா வெட்கப்பட வேண்டும்

amanahசிங்கப்பூரில்   மேலும்    இரு    வங்கிகளுக்கு    1எம்டிபி   தொடர்பான   பர்வர்த்தனைகளுக்காக    அபராதம்   விதிக்கப்பட்டிருப்பதாக    அறிவிக்கப்பட்டிருப்பதை    அமனா      தலைவர்   ஒருவர்   பாராட்டினார்.  மலேசியா    அதற்கு   நேர்மாறாக    அந்த   ஊழல்   விவகாரம்  இழுத்துக்   கொண்டே  செல்வதைக்  கைகட்டி   வேடிக்கை   பார்த்துக்  கொண்டிருக்கிறது.

சிங்கப்பூர் நாணய ஆணையம் (எம்ஏஎஸ்)  1எம்டிபி   தொடர்புள்ள   பரிவர்த்தனைகளில்   ஈடுபட்டதற்காக    கிரெடிட்   சிவிஸ்,   யுனைடெட்   ஓவர்சீஸ்   பேங்க்   ஆகிய   வங்கிகளுக்கு    தண்டம்  விதித்ததை   அமனா    துணைத்   தலைவர்   சலாஹுடின்   ஆயுப்   பாராட்டினார்.

“அமெரிக்கா,   சுவிட்சர்லாந்து,  ஜப்பான்,   தென்  கொரியா,  சிங்கப்பூர்   ஆகிய   வளர்ந்த    நாடுகள்     அவற்றின்   நாட்டை   ஆள்வதில்    மிகை  உயர்   நேர்மைப்  பண்பை    வெளிப்படுத்தி   உலகுக்கு     நல்ல   முன்மாதிரியாக   நடந்து   கொண்டுள்ளன.

“1எம்டிபி   விவகாரங்கள்   தொடர்பில்   சிங்கை   அரசின்   கடும்     நடவடிக்கை   நம்  நாட்டையும்   மக்களையும்   வெட்கப்பட    வைத்துள்ளது”,  என்றாரவர்.

1எம்டிபி   ஊழல்களுடன்    தொடர்புள்ள   அக்குடியரசின்  எட்டு  வங்கிகளுக்கு    SG$30 மில்லியன்   வரை   தண்டம்  விதிக்கப்பட்டிருப்பதாக  சிங்கப்பூர் நாணய ஆணைய   நிர்வாக   இயக்குனர்   ரவி  மேனன்   தெரிவித்திருப்பதை    அவர்   சுட்டிக்காட்டினார்.

இதற்கு    நேர்  எதிராக   எம்டிபி  மற்றும்   ‘மலேசிய   முதல்நிலை   அதிகாரியின்’  ஊழல்  விவகாரம்   ஐந்தாண்டுகளாக   ஜவ்வுபோல்  இழுத்துக்கொண்டு   சென்று   “அரசியல்,  பொருளாதாரச்   சீரழிவையும்   படுமோசமான   வெட்கக்கேட்டையும்   ஏற்ப