‘மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் போலீசுக்கு எதிராக செயல்படவில்லை, ஊழலுக்கு எதிராகத்தான் செயல்படுகிறது என அந்த ஆணையத்தின் ஆலோசனை வாரியம் கூறிற்று.
“சமுதாயத்தில் நிலவும் எல்லா வகை ஊழல்களுக்கு எதிராகவும் எம்ஏசிசி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன். போலீஸ் படையை மட்டும் குறி வைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறுவது தவறு என்பதைத் தெளிவுபடுத்த ஆலோசனை வாரியம் விரும்புகிறது.
“இது அரசாங்கத்தில், வணிகத்துறையில், அரசியலில் நிலவும் ஊழலுக்கு எதிரான போராட்டாம்”, என ஆலோசனை வாரிய தலைவர் துங்கு அசிஸ் துங்கு இப்ராகிம் ஓர் அறிக்கையில் கூறினார்.
போலீஸ்காரர்களில் ஒரு சிலர் ஊழலில் ஈடுபட்டு வரும் வேளையில் மறுபுறம் நீலநிற சீருடை அணிந்த ஆண்களும் பெண்களுமாக ஆயிரக்கணக்கான போலீசார், பதவியேற்றபோது எடுத்துக்கொண்ட பதவி உறுதிமொழிக்கிணங்கவும் எந்தவொரு நன்றிக்கடனையும் எதிர்பாராமலும் பெரும்பாலும் ஆபத்தான பணிகளை மக்களின் நலன்கருதி மனமகிழ்ச்சியோடு செய்து வருகிறார்கள் என்றாரவர்.
அதுதான் தெரியுமே டா.,,,,, ஆனால் மக்களுக்கு
எதிரி