செய்த தவறுகளுக்காக வருத்தம் தெரிவித்தேன், மகாதிர் ஒப்புக்கொள்கிறார்

 

RepentedMசெய்த தவறுகளுக்காக பரிகாரம் தேடுங்கள் என்று தமக்கு கூறப்பட்ட அறிவுரைக்கு ஏற்ப தாம் வருத்தம் தெரிவித்ததாக 92 வயதான அரசியல்வாதி மகாதிர் முகமட் ஒப்புக்கொண்டார்.

“நான் வருத்தம் தெரிவித்து விட்டேன். அதனால் நான் நாட்டை பீடித்திருக்கும் பிரச்சனைகள் மீது கவனம் செலுத்துமாறு வற்புறுத்தப்பட்டுள்ளேன்.

“நான் அதை உதாசீனப்படுத்த முடியாது. நான் பல்வேறான தவறுகளை நேரில் பார்க்கிறேன் என்பதோடு பலர் ஏதாவது செய்யும்படி என்னை கேட்டுக் கொண்டுள்ளனர்”, என்று மகாதிர் அவரது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இளைஞர் சமுதாயத்தை ஒரு பிடி பிடித்து விட்ட மகாதிர், இளைஞர்கள் நாட்டின் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமுதாயப் பிரச்சனைகளை கூர்ந்து கவனிக்க வேண்டும் என்றும், நாடு பாழாக்கப்படுவதற்கு முன்னதாகவே அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் குற்றவாளிகள் பொதுத்தேர்தலுக்குப் பிறகும் தொடர்ந்து நாட்டை பாழாக்காமல் இருப்பதை உறுதி செய்ய முடியும் என்றாரவர்.

“இளைஞர்கள் தாங்கள் முதியவர்களாகும் வரையில் காத்திருப்போம் என்று கூறமாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்”, என்று அவர் மேலும் கூறினார்.