முதலீடுகளுக்கு வசதி செய்து கொடுப்பதற்காக வருத்தப்படவில்லை- நஜிப்

bankமலேசியாவில்  முதலீடு    செய்ய   வருவோருக்கு   வசதி   செய்து  கொடுப்பதற்காக  தாம்   வருத்தப்படவில்லை   என்று   குறிப்பிட்ட   பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்   நாட்டின்  இறையாண்மை  ஒருகாலும்   விட்டுக்கொடுக்கப்படாது    என்றும்   வலியுறுத்தினார்.

முதலீடுகள்  மலேசிய   மக்களுக்கும்      வெளிநாட்டுப்  பங்காளிகளுக்கும்    நன்மை   அளிப்பவை   என்றார்.

“குருட்டுத்தனமான   நம்பிக்கையிலும்   பொருளாதாரத்தின்  அடிப்படைகளைப்  புரிந்து  கொள்ளாமலும்  இந்த   முதலீடுகளை    வேண்டாம்   என்று   மறுத்தால்   அது    நாட்டுக்குத்தான்  தீங்காய்   அமையும்.

“இதை  ‘மிக   வேகம்,   மிக   அதிகம்’   என்று  குறைகூறுவோருக்கு   ஒன்றைச்  சொல்லிக்கொள்ள    விரும்புகிறேன்:  மலேசியாவின்   மேம்பாடு  சுணக்கம்   அடைய  வேண்டும்    என்று   நீங்கள்  விரும்பினால்,   மலேசியா   பின்தங்கிக்  கிடக்க  வேண்டும்    என்பது   உங்கள்   விருப்பமானால்,    புதிதுபுதிதாக    வேலை   வாய்ப்புகள்    உருவாக்கப்படுவதையோ   வருமானம்   உயர்வதையோ    நீங்கள்   விரும்பவில்லை   என்றால்     உங்கள்  (குறைகூறும்)  இயக்கம்   தொடரட்டும்.

“மலேசியாவில்  முதலீடுகளுக்கு    வசதி   செய்து  கொடுப்பதற்காக    நான்   வருத்தப்பட   மாட்டேன்.  இம்முதலீடுகளால்   அனைவருக்கும்    நன்மையே.  மலேசிய   மக்களும்   பயனடைவர்,  வெளிநாட்டிலிருந்து  வந்த   நம்   பங்காளிகளும்   பயனடைவர்”.

இன்று  கோலாலும்பூரில்   சைனா   கொன்ஸ்ட்ரக்சன்   பேங்க்(மலேசியா)  பெர்ஹாட்டின்   திறப்பு  விழாவில்   நஜிப்   இவ்வாறு   கூறினார்.