நாடு முழுக்க உள்ள பிகேஆர் இளைஞர் பிரிவுகள், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பிரபல வழக்குரைஞர் ஒருவருக்கு ரிம9.5 மில்லியன் கொடுத்தார் என்று சரவாக் ரிபோர்ட் குற்றஞ்சாட்டிருப்பதன்மீது போலீசில் புகார் செய்யும்.
அக்குற்றச்சாட்டு அந்த முக்கியமான வழக்கில் “மறைமுகமான கரமொன்று பின்னணியிலிருந்து செயல்பட்டிருப்பதைக் காண்பிக்கிறது”, என பிகேஆர் இளைஞர் துணைத் தலைவர் டாக்டர் அபிப் பஹார்டின் கூறினார்.
“சரவாக் ரிபோர்ட் செய்தி அரசியல் சதி நிகழ்ந்துள்ளது என்ற கருத்துக்குத் துணை நிற்கிறது”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
மலேசியாகினி சம்பந்தப்பட்ட வழக்குரைஞரைத் தொடர்புகொள்ள முயன்று வருகிறது. அவரது கருத்தைப் பெறாமல் அவரது பெயரையோ அவர் சம்பந்தப்பட்ட வழக்கு பற்றிய விவரங்களையோ அது வெளியிடாது.
சரவாக் ரிப்போர்ட் செய்தியில் 1எம்டிபி-இன் முன்னாள் துணை நிறுவனமான எஸ்ஆர்சி- இடமிருந்து எந்த வங்கிக் கணக்குக்குப் பணம் மாற்றலானதோ அந்த வங்கிக் கணக்கிலிருந்தே சம்பந்தப்பட்ட வழக்குரைஞருக்குப் பணம் கொடுக்கப்பட்டது என்று கூறப்பட்டிருந்தது.