கோலாலும்பூர் உயர் நீதிமன்றம், சிறையில் உள்ள எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின்மீது தொடுத்துள்ள ரிம100 மில்லியன் அவதூறு வழக்கை இன்று மூன்றாம் முறையாக ஒத்தி வைத்தது.
கைரியின் வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லா உடல்நலக் குறைவால் இன்று வர இயலாது என்று தெரிவிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தது. மூன்றாவது தடவையாக இக்காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி அசிசுல் அஸ்மி அட்னான் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 7-இல் நடைபெறும் என்று அறிவித்தார். ஷாவி மருத்துவ விடுப்பிலிருந்து ஜூன் 7-ல் திரும்புகிறார்.
இதுதான் கடைசி ஒத்திவைப்பு என்றும் நீதிபதி குறிப்பிட்டார். ஷாபி ஆகஸ்ட் 7-இலும் வர முடியாமல் போனால் வேறொரு வழக்குரைஞர் வைத்துத்தான் வாதாட வேண்டும் என்றாரவர்.