இன்று காலை லூமுட் கடற்படைத் தளத்தில் நின்று கொண்டிருந்த அரச மலேசிய கடற்படைக் கப்பலான கேடி ஜிபாட் போர்க் கப்பலில் தீ பற்றிக் கொண்டது. நல்ல வேளையாக உயிருடற் சேதமில்லை.
அதிகாலை மணி 2.30க்கு கப்பல் பணியாளர்கள் ‘சஹுர்’ உணவு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது தீ பற்றிக் கொண்டதாக தொடக்கநிலை தகவல்கள் தெரிவிப்பதாக அரச மலேசிய கடற்படை தலைமை அட்மிரல் டான்ஸ்ரீ அஹ்மட் கமருல்ஜமான் கூறினார்.
“கடற்படை வீரர்கள் விரைவாக செயல்பட்டதுடன் லூமுட்டிலிருந்து வந்த தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் 5 மணி அளவில் தீயை முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்”, என்றாரவர்.

























