அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கும் ஹரிராயா கொண்டாட்டத்திற்கு அரசு ஊழியர்களுக்கு ரிம500 நிதி உதவி அளிக்கப்படும் என்று பிரதமர் நஜிப் அறிவித்துள்ளார்.
நிதி அமைச்சருமான நஜிப், ஊய்வு ஊதியம் பெறுபவர்கள் ரிம250 நிதி உதவி பெறுவர் என்றும் கூறினார்.
இந்தச் சிறப்பு நிதி உதவியால் 1.6 மில்லியன் அரசு ஊழியர்களும், 775,000 ஓய்வு ஊதியம் பெறுபவர்களும் பலனடைவர் என்று நிதி அமைச்சு வெளியிட்ட வேறொரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அரசாங்கம் ரிம1 பில்லியன் செலவிட வேண்டியிருக்கும் என்றும் அத்தொகை ஜூன் 9 க்கு முன்னர் கொடுக்கப்படும் என்றும் நிதி அமைச்சின் அறிக்கை மேலும் கூறியது.
04/06/2017
ஹரிராயா , இந்த மாதம் கொண்டாடப்படூம் என்று செம்பருத்திக்கு தெரியாதோ, அடுத்த மாதம் என்று குறிப்ப்பிட்டுள்ளீர்.
அவனிடம் இல்லாத பணமா? எல்லாம் வரும் தேர்தலுக்கு ஆயத்தம். அதிலும் சிந்திக்க தெரியாத மாக்களுக்கு அதுதானே முக்கியம். நாடு ஒற்றுமையோடு முன்னேற வேண்டும் என்று யார் நினைக்கிறார்கள்?