ஒரு மசூதியில் பேசியதற்காக சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சிவராசாவை குறிப்பிட்டு அவர் எல்லையை மீறி விட்டார் என்று சிலாங்கூர் சுல்தான் ஷாராபுடின் இட்ரீஸ் ஷா கூறினார்.
“நான் அரசியல்வாதிகளை மசூதியில் பேச அனுமதிப்பதில்லை ஏனென்றால் அது முஸ்லிம்களின் ஒற்றுமையின்மைக்கு காரணமாக இருப்பதை நான் விரும்பவில்லை, ஆனால், எனது ஆலோசனை தெளிவாக உதாசீனப்படுத்தப்பட்டுள்ளது.
“நான் வலியுறுத்த விரும்புகிறேன், சுபாங் எம்பி சிவராசா – நீர் எல்லையை மீறி விட்டீர்!”, என்று ஷா அலாம், அன் நூர் மசூதியில் நோன்பு துறக்கும் நிகழ்ச்சியில் அவர் கூறினார்.
ஆனால், தாம் அரசியல் பேசவில்லை என்று கூறிய சிவராசா, நன்கொடை அளிப்பதற்காக மசூதிக்கு வந்ததாகவும், பேசுவதற்கு அழைத்த போது தாம் சுறுக்கமாக ரமதான் வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறினார்.
ஆமாம் சுல்தான் கூறியது சரி.
அனால் கோவில் உள்ளே புகுந்து சிலையையே உடைத்து விட்டு சும்மா விடுறானுங்க .அப்பொழுது மட்டும் ஏன் கண்டிக்க மாட்டிரிங்கே ?
நாட்டில் எத்தனையோ “எல்லைமீறிய சம்பவங்கள்” நடந்துகொண்டிருக்கின்றன! பதவியில் பணிவு தேவை.
சிவா ரஸா , ஐயா சிவா ராசா உனக்கு என்ன ஆச்சி.
ஐயா loganaathan அவர்களே– இதை எல்லாம் நாம் கேட்கக்கூடாது– நமக்கு ஒரு வெங்காய உரிமையும் கிடையாது– துங்கு காலத்தில் இப்படி நடந்திருக்குமா? அப்போது இந்த ஈனங்களின் நிலை என்ன? எப்போது எல்லாவற்றையும் பிடிங்கி விட்டதால் இந்த ஆணவம் திமிர் அகங்காரம். MIC -துரோகிகள் MCA -கூஜாக்கள் அவங்களின் காலை நக்கிக்கொண்டிருந்தால் வேறு என்ன நடக்கும்?