கேஎல் வியாபாரிகள்: ஊராட்சி மன்றங்களில் பூமி- அல்லாதாருக்கும் இடமளிப்பீர்

traderஊராட்சி   மன்றப்  பணியாளர்கள்   மலேசியாவின்   பல   இனங்களையும்  சேர்ந்தவர்களாக    இருத்தல்   வேண்டும்  அப்போதுதான்   அவர்களால்    எல்லாச்  சமூகங்களுக்கும்   சிறப்பாக   சேவையாற்றிட    முடியும்    என்கிறது   கோலாலும்பூர்  மற்றும்  சிலாங்கூர்  சிறு  வணிகர்,   அங்காடி  வியாபாரிகள்    சங்கம்.

அது   நிலம்,  வீடமைப்பு,  வியாபார   உரிமம்   போன்றவற்றுக்கு   விண்ணப்பம்   செய்யும்போதும்     வழிபாட்டு    இல்லங்களை    இடமாற்றம்  செய்யும்  போதும்   சீனர்,  இந்திய   சமூகங்களுக்கு    ஊராட்சி   மன்றங்களுடன்   விவாதிக்க   உதவியாக    இருக்கும்    என்று    சங்கத்   தலைவர்   ஆங்   சாய்  டீ   கூறினார்.

ஊராட்சி   மன்றப்   பணியாளர்கள்   பெரும்பாலும்    பூமிபுத்ராக்களாக   இருப்பதை    அவர்    சுட்டிக்காட்டினார்.

“இவ்விவகாரத்தில்   கவனம்   செலுத்தி,  நிர்வாகத்தை   1மலேசியக்    கலாச்சாரத்தை   பிரதிபலிக்கும்   வகையில்   தரப்படுத்த   வேண்டும்”,  என்றவர்   பெர்னாமாவிடம்    தெரிவித்தார்.

மசீச   தலைவர்    லியோ   தியோங்   லாய்,     சீனர்   ஒருவர்     டத்தோ  பண்டாராக  (மேயராக)   அல்லது   துணை   மேயராக    நியமிக்கப்பட   வேண்டும்   என்று   அண்மையில்   ஒரு   பரிந்துரையை   முன்வைத்திருப்பதாகக்   கூறப்படுகிறது.

இதனிடையே,  கோலாலும்பூர்   மாநகர்  மன்ற (டிபிகேஎல்)    ஆலோசனை   வாரிய   உறுப்பினர்   இங்   ஹவ்   டூ,   ஊராட்சி    மன்றங்களில்    உள்ளூர்  சீன,  இந்திய  சமூகங்கள்   சம்பந்தப்பட்ட     விவகாரங்களைக்  கவனிப்பதற்கென்றே   ஒருவரை  நியமிக்க   வேண்டும்    என்று  அறிவுறுத்தியுள்ளார்.

-பெர்னாமா