‘வழக்குரைஞருக்குக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ரிம9.5 மில்லியன் குறித்து விரைவில் விவாதிப்போம்’

surenமுகம்மட்  ஷாபி    அப்துல்லா    பிரதமர்   நஜிப்    அப்துல்  ரசாக்கிடமிருந்து   ரிம9.5 மில்லியன்  பெற்றதாகக்   கூறப்பட்டிருப்பதன்   தொடர்பில்    அடுத்து   என்ன   சட்ட    நடவடிக்கை   எடுப்பது     என்று   விரைவில்   விவாதிப்போவதாக    சிறையில்    உள்ள    முன்னாள்    எதிரணித்    தலைவர்    அன்வார்   இப்ராகிமின்   வழக்குரைஞர்    என்.  சுரேந்திரன்   கூறினார்.

அன்வார்  இப்ராகிமின்    குதப்  புணர்ச்சி    வழக்கில்    அவருக்கு   எதிராக   வெற்றிகரமாக    வாதாடி   அவருக்குத்   தண்டனை    பெற்றுத்   தந்த   வழக்குரைஞர்தான்   ஷாபி.

“இப்போது   இத்தகவல்   வெளியாகியுள்ளதால்    விரைவில்   அன்வாரைச்   சந்தித்து    அடுத்து    எடுக்கப்பட    வேண்டிய   நடவடிக்கைகள்    குறித்து  விவாதிக்கப்   போகிறோம்.

“என்ன    நடவடிக்கைகள்   என்பதை   விரைவில்    அறிவிப்போம்”,  என   சுரேந்திரன்   மலேசியாகினி     அவரைத்    தொடர்புகொண்டபோது    கூறினார்.