கர்பாலுக்கு தாவோ சமயக் கோவில், வியப்பில் குடும்பம்

TaotempleforKarpalகாலஞ்சென்ற கர்பால் சிங்கை பெருமைப்படுத்தும் ஒரு தாவோயிசக் கோவில் அவருடைய குடும்பத்தை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மே 1 இல், பேராக் மாநிலத்தில் இக்கோவில் அமைக்கப்பட்ட போது குடும்பத்தோடு கலந்தாலோசிக்கப்படவில்லை என்று கர்பாலின் மகன் ராம்கர்பால் சிங் கூறினார்.

“அது அமைக்கப்படுவதற்கு முன்பு அது குறித்து எங்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. இது முற்றிலும் எதிர்பாராதது.

“நாங்கள் எந்த ஒரு சமயத்தையோ பாரம்பரியத்தியோ புண்படுத்த விரும்பவில்லை என்பதோடு இந்த விவகாரம் குறித்து கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை”, என்று அவர் தொடர்பு கொண்டபோது மலேசியாகினியிடம் கூறினார்.

இக்கோவிலை தெலுக் இந்தானிலுள்ள தியன் பெங் கோங் கோவில் அமைத்தது.

ரிம2,000 திரட்டிய பின்னர், அதில் ஒரு சாபாஹான் பக்தரின் நன்கொடையும் அடங்கும், இக்கோவில் கட்டி முடிக்கப்பட்டது என்று தியன் பெங் கோங் கோவிலின் மேற்பார்வைப் பொறுப்பாளர் கோ சாய் ஹுவாட் கூறியதாக சின் சியு டெய்லி செய்தி கூறுகிறது.

டிஎபியின் தேசியத் தலைவராகவும் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த கர்பால் கம்பாரில் நடந்த வாகன விபத்தில் கடந்த ஏப்ரல் 17, 2014 இல் காலமானார்.

இப்போது, ராம்கர்பால் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.