மத்திய லண்டன் பயங்கரவாதிகளின் தாக்குதல், அறுவர் கொல்லப்பட்டனர்

Centrallondonattackபிரிட்டீஷ் ஆயுதம் தாங்கிய போலீசார் மூன்று சம்பவங்கள் நடந்த மத்திய லண்டனுக்கு விரைந்தனர். அங்கு லண்டன் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தவர்களை ஒரு வாகனம் மோதித்தள்ளியது மற்றும் அருகிலிருந்த மார்க்கெட் பகுதியில் பலர் கத்தியால் குத்தப்பட்டனர் என்று கூறப்பட்டது.

லண்டன்வாசிகளுக்கு டிவிட்டர் வழி போலீசார் அனுப்பிய பாதுகாப்பு ஆலோசனையில், மக்கள் தாக்குதல் சம்பவத்தில் சிக்கிக் கொண்டால் “ஓடுங்கள், பதுங்கிக்கொள்ளுங்கள், தெரியப்படுத்துங்கள்”, என்று கூறப்பட்டிருந்தது.

அறுவர் கொல்லப்பட்டதாக போலீசார் நம்புகின்றனர். 30க்கு மேற்பட்டவர்கள் நகரிலுள்ள மருத்துமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக லண்டன் அம்புலன்ஸ் கூறுகிறது.

ஜூன் 8 தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கையில் மற்றும் இரண்டு வாரங்களுக்கு முன்பு வட இங்கிலாந்து மான்செஸ்டரில் குண்டு வெடிப்பால் 22 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இத்தாக்குதல் நடந்துள்ளது. இத்தாக்குதலுக்கு இதுவரையில் எவரும் பொறுப்பேற்றுக்கொள்ளவில்லை.

இச்சம்பவம் குறித்து பிரிட்டீஷ் பிரதமர் மே தெரசா மற்றும் அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் ஆகியோருக்கு உடனடித் தகவல் அளிக்கப்பட்டு வருகிறது.