மத்திய லண்டனில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் அறுவர் கொல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது. இன்று மலேசியா இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தது.
இச்சம்பவத்தால் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக பிரதமர் நஜிப் ரசாக் கூறினார்.
“நான் அதிர்ச்சியும் வெறுப்பும் அடைந்துள்ளேன். இது போன்ற மிகக்கொடிய செயல்களை மலேசியா கண்டிக்கிறது. நாம் பிரிட்டீஷ் மக்களுடன் இணைந்திருக்கிறோம்”, என்று நஜிப் அவரது மிக அண்மைய டிவிட்டில் கூறுகிறார்.
இச்சம்பவத்தில் ஆறு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். சந்தேகிப்படும் மூன்று நபர்களை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
இந்தச் சம்பவத்தில் மலேசியர்கள் எவரும் சம்பந்தப்படவில்லை என்பதை விஸ்மா புத்ரா உறுதிப்படுத்தியதோடு நிலவரத்தை கூர்ந்து கவனித்து வருவதாகவும் அது தெரிவித்தது.
அவசர உதவி அல்லது மேற்கொண்டு தகவல் பெற விரும்பும் மலேசியர்கள் மலேசிய ஹைகமிசனை +44 (0) 207 242 4308 அல்லது மின் அஞ்சல் [email protected] வழி தொடர்புகொள்ளலாம்.
லண்டனில் சாகிர் நாயக்கை போன்ற தீவிரவாதிகளும், பயங்கரவாதிகளும் சற்று அதிகம் தான் போலும்.
பிரதமர் அவர்களே நீங்கள் அதர்ச்சியில் இருந்தாலும் நமது நாட்டில் இதைப் போன்ற பயங்கரம் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுத்தாக வேண்டும் அதிலும் சமய தீவிரவாதிகளின் மீது எச்சரிக்கை…
உண்மையிலேயே அதிர்ச்சியில்தான் நஜிப், லண்டன் தாக்குதலைக் கண்டித்தாரா ? அல்லது உள்மனதில் மகிழ்ச்சியுடன் கண்டித்தாரா ? ஆண்டவனுக்கே வெளிச்சம்.
ஏனென்றால் இந்த தாக்குதலிலும் மலேசியர் பங்கு பெற்றிருந்தால் மதத்திற்கும்-நாட்டிற்கும் பெருமையல்லவா !
ஐயா rahim அவர்களே நீங்கள் கூறுவது உண்மை. பலர் தலையை மண்ணில் புதைத்து வைத்துக்கொண்டிருக்கின்றனர். காலம் இன்னும் எவ்வளவு தலையை வாங்குமோ………………………..?
seernyanathan muniandy
உங்கள் கருத்து செவிடன் காதில் சங்கு ஊதுவதுபோல் உள்ளது.
அது செவிடன் காதில் அல்ல — திருடனிடமே பாதுகாக்க கூறுவது.