பயங்கரவாதத்தை ஒடுக்க இராணுவம், போலீஸ், கைது நடவடிக்கைகள் மட்டும் போதாது, கருத்தியல் போராட்டத்திலும் வெற்றி பெறுவது முக்கியம் என்கிறார் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்.
அண்மையில் காபூல், மென்செஸ்டர் (யுனைடெட் கிங்டம்), மராவி(பிலிப்பீன்ஸ்), ஜாகார்த்தா ஆகியவற்றில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் மோசமானவை, கவலையளிப்பவை .
“அல்ஹம்துலில்லாஹ், நம் நாட்டில் அப்படிப்பட்ட தாக்குதல்கள் நிகழவில்லை.
“ஆனாலும், பயங்கரவாத மருட்டலையும் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.அதற்கு போலீஸ், இராணுவம், கைது நடவடிக்கைகள் மட்டும் போதாது”, என நஜிப் புத்ராஜெயாவில் பிரதமர்துறையின் மாதாந்திரக் கூட்டத்தில் பேசியபோது கூறினார்.
பயங்கரவாத மருட்டலை வெற்றிகொள்ள கருத்தியல் போரிலும் வெற்றி பெறுவது முக்கியம் என்று குறிப்பிட்ட பிரதமர் அதைவிட “இஸ்லாம் என்றால் உண்மையில் என்ன என்பதைப் புரிந்துகொள்வதும் அவசியம்” என்றார்.