அன்வார்: பிரதமர் ஆவது குறித்து மகாதிர் முடிவெடுக்க முடியாது

anwarபக்கத்தான்   ஹராபானின்   பிரதமர்  வேட்பாளரை   நியமிப்பதில்   பங்காளிக்கட்சிகளின்   ஒருமித்த   கருத்து   தேவை   என்பதை   அன்வார்  இப்ராகிம்   வலியுறுத்தினார்.

அவரின்    முன்னாள்    எதிரி    டாக்டர்     மகாதிர்    முகம்மட்,      எதிரணியினர்    விரும்பினால்   மீண்டும்   பிரதமராவதற்குத்  தயார்    எனக்   கூறியிருப்பது   குறித்து   கருத்துக்  கேட்டதற்கு   அன்வார்   இவ்வாறு   குறிப்பிட்டார்.

“இதை      முடிவு  செய்வது   அவரல்ல.  ஹராபான்தான்  முடிவு   செய்ய   வேண்டும்.

“(பிரதமர்   பதவி)   யாரும்   தாமே  முன்வந்து   ஏற்பதல்ல,      கருத்திணக்கம்   தேவை”.  இன்று   ஷா  ஆலம்   நீதிமன்றத்துக்கு   வழக்கு   விசாரணைக்காக   வந்திருந்த    அன்வாரைச்   செய்தியாளர்கள்     சந்தித்தனர்.

அன்வார்  பிரதமர்   ஆவதே    பக்கத்தான்   ஹராபானில்   பெரும்பாலோரின்   விருப்பமாகும்.

ஆனால்,  அதில்  ஒரு   சிக்கல்  இருக்கிறது.   அரச   மன்னிப்பின்றி,   அன்வார்   அடுத்த    ஆண்டில்   விடுவிக்கப்பட்டாலும்  அவர்   தண்டனை   பெற்ற   குற்றவாளி    என்பதால்    அடுத்த   ஐந்தாண்டுகளுக்குத்    தேர்தலில்    போட்டியிட   முடியாது.