லண்டன் தாக்குதலுக்கு ஐஎஸ் பொறுப்பு ஏற்கிறது

 

ISclaimsresponsiblityலண்டனில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இஸ்லாமிய் அரசு (ஐஎஸ்) பொறுப்பு ஏற்பதாக அது கூறிகொண்டது.

கடந்த சனிக்கிழமை இரவு லண்டன் பாலத்தில் மூவர் ஒரு வாகனத்தை பாதசாரிகள் மீது மோதியதோடு அருகிலிருந்த மதுபானம் விற்கும் இடம் மற்றும் உணவகங்களில் இருந்தவர்களைக் குத்தினர். இச்சம்பவத்தில் எழுவர் கொல்லப்பட்டனர் மற்றும் 48க்கு மேற்பட்டோர் காயமுற்றனர்.

இதுவரையில் 12 பேர் இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் பற்றிய அவசர அழைப்பு கிடைக்கப்பட்ட 8 நிமிடத்திற்குப் பின்னர் போலீசார் தாக்குதல் நடத்திய மூவரை சுட்டுக் கொன்றனர்.

மொத்தம் 36 பேர் மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வருகின்றனர் என்றும் அவர்களில் 21 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் சுகாதார அதிகாரிகல் தெரிவித்தனர்.

காயமுற்றவர்களில் இரு போலீஸ் அதிகாரிகளும் அடங்குவர்.

இஸ்மிய அரசு ஆதரவாளர்கள் இத்தாக்குதலைக் கொண்டாடியதாக கூறப்படுகிறது.