நாடுகடத்தப்படும் சட்டவிரோத தொழிலாளர்கள் திரும்பி வராமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்

illegalஅதிகாரிகள்    சட்டவிரோத    தொழிலாளர்களை     மலேசியாவிலிருந்து    நாடு கடத்துவது    மட்டும்   போதாது,   அவர்கள்    திரும்பி   வராமலிருப்பதையும்    உறுதிப்படுத்திக்கொள்ள    வேண்டும்.

இவ்வாண்டு   ஜனவரிக்கும்    மே-க்குமிடையில்    23,000  க்கும்   மேற்பட்ட     சட்டவிரோத   அன்னிய  தொழிலாளர்கள்   நாடு  கடத்தப்பட்டதாக    குடிநுழைவுத்   துறை    தலைமை    இயக்குனர்     முஸ்தபார்   அலி   கூறியிருப்பதற்கு    எதிர்வினையாக   பிகேஆர்    தலைமைப்  பொருளாளர்    டான்   ஈ   கியு  இவ்வாறு   கூறினார்.

நாடுகடத்தப்பட்ட   அன்னிய   சட்டவிரோத  தொழிலாளர்களில்  முதலிடத்தில்  இருப்பவர்கள்    இந்தோனேசியர்,  6489 பேர்.    அதற்கு   அடுத்து   வங்காள   தேசிகள்,  4,220  பேர்.

அதிகாரிகளைப்    பாராட்டிய    டான்,   நாடு  கடத்தப்பட்ட   அன்னிய    சட்டவிரோத   தொழிலாளர்கள்    மீண்டும்   மலேசியாவுக்கு   எளிதாகத்    திரும்பி   வருவதைத்   தடுப்பது      அதைவிட   முக்கியம்     என்றார்.

“அதைத்   தடுக்காவிட்டால்,  சட்டவிரோத   குடியேறிகள்   திரும்பி   வந்து    அவர்கள்   அதிகம்   ஈடுபட்டிருந்த       விபசாரம்,  (சட்டவிரோத)   உடம்புப்  பிடி   நிலையங்கள்  போன்ற     குற்றச்   செயல்களைத்    தொடர்வார்கள்”,  என  டான்   இன்று   ஓர்    அறிக்கையில்   கூறினார்.