சிஎம்: மலாக்கா கடன்பட்டிருப்பதற்கு ஊழல் காரணம் அல்ல

cmமலாக்கா   மாநிலம்   அதிக   அளவு   கடன்பட்டிருப்பதற்கு     ஊழலே   முக்கிய   காரணம்   என்று   கூறப்படுவதை   முதலமைச்சர்    இட்ரிஸ்   ஹருன்   மறுத்தார்.

மக்களின்    தேவைகளுக்காக   அடிப்படை   கட்டுமான    வசதிகளைச்  செய்து   கொடுக்க     வேண்டிய  பொறுப்பில்   மாநில   அரசு   உள்ளது.  ஆனால்,  அதற்காகும்    செலவுகளை   ஈடு    செய்ய    போதுமான   வருமானம்   அதற்கில்லை  என்று  கூறிய   இட்ரிஸ்   புள்ளிவிவரம்    எதையும்   அளிக்கவில்லை.

“(கடன்  பட்டதற்கு)  பல   காரணங்கள்   உண்டு.  குடிநீர்   விநியோகத்  திட்டங்கள்,   விளையாட்டு   அரங்குகள்,   சிறு,  நடுத்தர   தொழில்கள்,   குறைந்த- விலை   வீடமைப்புத்    திட்டங்கள்.

“இன்னும்    பல    திட்டங்களைக்  கூட்டரசு  அரசாங்கத்திடம்   கடன்   பெற்றுத்தான்  மேற்கொள்ள    வேண்டியுள்ளது”.  அவர்  இன்று   மலாக்கா     சட்டமன்றத்தில்   கூ  போய்   தியோங் (டிஏபி-  ஆயர்  குரோ) -இன்  கேள்வி   ஒன்றுக்குப்  பதிலளித்தபோது   இவ்வாறு  கூறினார்.