எப்ஜிவிஎச்-இன் சிஇஓ-விடமிருந்து கையூட்டு பெற்றதாக த ஸ்டார் பணியாளர்மீது குற்றச்சாட்டு

arrestத   ஸ்டார்    செய்தித்தாளின்   பணியாளர்    ஒருவர்   ரிம20,000   கையூட்டு   பெற்றார்    என   இன்று   கோலாலும்பூர்    செஷன்ஸ்   நீதிமன்றத்தில்    குற்றஞ்சாட்டப்பட்டது.

எம். யோகேஸ்வரன்,   இவ்வாண்டு   மே    30ஆம்   நாள்,    ஜாலான்   துன்  ரசாக்கில்   உள்ள    த   இண்டர்மார்க்   ஹோட்டலில்,    பெல்டா   குளோபல்   வெண்ட்சர்ஸ்    ஹொல்டிங்ஸ்  பெர்ஹாட் (எப்ஜிவிஎச்)   முன்னாள்   தலைமை      செயல்    அதிகாரி     முகம்மட்   எமிர்    மவானி   அப்துல்லாவிடமிருந்து    அப்பணத்தைப்   பெற்றுக்கொண்டதாகக்   கூறப்பட்டது.

செய்தித்துறையின்  உதவிச்   செய்தியாசிரியனான   அந்த    54-வயது   ஆடவர்,   நீதிபதி   மதிஹா   ஹருலா   முன்னிலையில்   குற்றப்பத்திரிகை    வாசிக்கப்பட்டபோது   குற்றச்சாட்டை    மறுத்திருக்கிறார்.

அப்பணம்   மலேசிய    ஊழல்தடுப்பு    ஆணையத்தின்   விசாரணைக்கு   உள்பட்டிருந்த   முகம்மட்   எமிருக்கு  “உதவி  செய்வதற்காக”  யோகேஸ்வரனிடம்   கொடுக்கப்பட்டதாம்.

யோகேஸ்வரன்   எம்ஏசிசி   சட்டம்  2009    பிரிவு   16ஏ (பி)-இன்கீழ்   குற்றம்   சுமத்தப்பட்டார்.  அச்சட்டத்தின்கீழ்   குற்றவாளிக்கு   20 ஆண்டுக்கு    மேற்போகாத   சிறைத்   தண்டனை  அல்லது  ரிம10,000  அல்லது   கையூட்டுப்  பணத்தைப்போல்   ஐந்து   மடங்கு   அபராதம்  அல்லது   இரண்டும்    சேர்த்து  விதிக்கப்படலாம்.