ஸாகிட் மலாக்கா ‘ஜெருசலம் ஜூப்ளி’ நிகழ்ச்சிக்கு தடை விதித்தார்

 

Jerusalemsjubileeமலாக்காவில் ஜூன் 15 லிருந்து 18 வரையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த “ஜெருசலம் ஜூப்ளி” நிகழ்ச்சியை ரத்து செய்ய போலீசாருக்கு துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி உத்தரவிட்டார்.

அந்த பேரணியை நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டால் அது முஸ்லிம்களை நோகச் செய்யும் என்று ஸாகிட் கூறினார்.

“‘ஜெருசலம் ஜூப்ளி’யை ஏற்பாடு செய்கிறவர் யாராக இருந்தாலும், எனது அதிகாரப்பூர்வ உத்தரவின்கீழ் உமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அனுமதி ரத்து செய்யப்பட்டிருக்கிறது”, என்று அவர் இன்று ஈப்போவில் கூறினார்.

நிகழ்ச்சியை ரத்து செய்ய ஏற்பாட்டாளர்களே முடிவு செய்து விட்டனர்

முன்னதாக, ஜெருசலம் ஜூப்ளி ஏற்பாட்டாளர்கள் போலீசாருடன் கலந்தாலோசித்து நிகழ்ச்சியை ரத்து செய்ய ஏற்கனவே முடிவு செய்து விட்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை போலீஸ் அழைத்திருந்தது என்றும் பேரணியை ரத்து செய்வதற்கான முடிவை அவர்களே சொந்தமாக எடுத்திருந்தனர் என்றும் மலாக்கா போலீஸ் தலைவர் அப்துல் ஜாலில் ஹசான் கூறினார்.

மேலும், இன்று வரையில் 32 போலீஸ் புகார் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, பேரணிக்கு எதிராக போலீஸ் புகார்கள் செய்த முஸ்லிம் மற்றும் அரசு சார்பற்ற அமைப்பிகளுக்கும் ஸாகிட் நன்றி கூறினார்.

புக்கிட் அமானில் பல போலீஸ் புகார்கள் செய்யப்பட்டன. அவர்கள் அந்த விவகாரத்தை என்னிடம் கொன்டு வந்தனர். நான் அந்த பேரணியை ரத்து செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்டேன் என்று கூறிய ஸாகிட், பாலஸ்தீனத்தை இஸ்ரேல் கைப்பற்றியிருப்பதைக் கொண்டாடுவது மலேசியர்களின் உணர்ச்சியைப் புண்படுத்தியுள்ளது என்றாரவர்.