சீபீல்ட் கோவில் அகற்றப்படும் திட்டம் முடக்கப்பட்டிருப்பதை மந்திரி புசார் உறுதிப்படுத்தினார்

 

seafieldtempleசீபீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோவிலை அங்கிருந்து அகற்றும் திட்டம் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதை சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி உறுதிப்படுத்தினார்.

இது ஒரு பழமையான கோவில் என்பதாலும் சமூகம் அதன் ஆதங்கத்தை தெரிவித்திருப்பதாலும் தாம் இது குறித்து சம்பந்தப்பட்ட மேம்பாட்டாளருடன் பேசி வெளியேற்றும் திட்டத்தை நிறுத்திவைக்க இணங்க வைத்துள்ளதாக அஸ்மின் கூறினார்.

“இரண்டு வாரத்திற்குள் நான் இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் சந்தித்துப் பேசி இதற்கு ஒரு சரியான தீர்வு காணப்படும்”, என்று மந்திரி புசார் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பற்றி தகராறு இருப்பதை ஒத்துக்கொண்ட அஸ்மின், இந்த விவகாரத்தை சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் வி. கணபதிராவ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்ல்ஸ் சந்தியாகு (கிள்ளான்), கோபிந்த் சிங் (பூச்சோங்) மற்றும் ஆர். சிவராசா (சுபாங்) ஆகியோருடன் இன்று விவாதித்ததாகவும் அவர் கூறினார்.