மார்ச் 8 இல் முன்மொழியப்பட்ட தேர்தல் தொகுதி எல்லை மறுவரையலுக்குப் பதிலாக இப்போது இருக்கும் தொகுதி எல்லையைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தேர்தல் ஆணையம் (இசி) தள்ளப்படலாம் என்று அதன் தலைவர் முகம்ட் ஹசிம் அப்துல்லா கூறுகிறார்.
இது சிலாங்கூர் மற்றும் மலாக்கா மாநிலங்களில் மேற்கொண்ட தொகுதி எல்லை மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் இன்னும் முடிவடையவில்லை என்பதே இதற்குக் காரணம்.
இந்த நீதிமன்ற வழக்குகள் இசியின் தேர்தல் தொகுதி எல்லை மறுசீரமைப்பு முன்மொழிதல்களின் முன்னேற்றத்தைப் பாதித்துள்ளன என்பதை ஹசிம் ஓரியண்டல் டெய்லிக்கு அளித்த நேர்காணலில் ஹசிம் ஒப்புக்கொண்டார்.
இதன் விளைவாக, தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை அடுத்த பொதுத்தேர்தலுக்கு முன்பு, அது ஆகஸ்ட் 2018 இல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, முற்றுப்பெறுமா என்பதை தம்மால் உறுதிப்படுத்த இயலாது என்று ஹசிம் கூறினார்.
“இதை உரிய நேரத்தில் செய்துமுடிக்க முடியாது என்றால், பிறகு பழைய தேர்தல் எல்லையை அடுத்த பொதுத்தேர்தலுக்குப் பயன்படுத்தியாக வேண்டும்”, என்று ஹசிம் இன்று கூறியதாக செய்தி தெரிவிக்கிறது.
இவனெல்லாம் நம்பிக்கை நாயகனின் கைத்தடிகள். எத்தகைய திருட்டு வேலைகளையும் செய்யும் ஈனம். நம்பிக்கை நாயகனே அப்படி என்றால் இந்த ஈனம் எப்படி?