பெல்டா தலைமையகத்தில் எம்ஏசிசி அதிகாரிகள்

fcv20க்கு     மேற்பட்ட    மலேசிய     ஊழல்தடுப்பு    ஆணைய(எம்ஏசிசி)   அதிகாரிகள்     இன்று  காலை   கோலாலும்பூரில்   உள்ள   கூட்டரசு   நில   மேம்பாட்டு  நிர்வாக(பெல்டா) த்   தலைமையகத்தில்    காணப்பட்டனர்.

பெல்டா   குளோபல்   வெண்ட்சர்ஸ்   ஹோல்டிங்   பெர்ஹாட்(எப்ஜிவி)   விசாரணை    தொடர்பான   ஆவணங்களை  எடுத்துச்   செல்வதற்காக    அங்கு   அவர்கள்   சென்றதாக     தெரிகிறது.

எப்ஜிபி-இன்    சிஇஓ  ஜக்கரியா   அர்ஷாட்    நேற்று   எம்ஏசிசியிடம்   வாக்குமூலம்   அளித்ததை    அடுத்து    இது   நிகழ்ந்துள்ளது.

எப்ஜிவி   விசாரணை   முடியும்வரை     விடுப்பில்   செல்லுமாறு  கட்டாயப்படுத்தப்பட்டுள்ள    ஜக்கரியா    செய்தியாளர்களிடம்   பேசியபோது   எதையும்  விட்டு  வைக்காமல்   தீர  விசாரணை    செய்யும்படி    தாம்    எம்ஏசிசியைக்   கேட்டுக்கொண்டிருப்பதாகக்   கூறினார்.

இதனிடையே,  எப்ஜிவி    தலைவர்    முகம்மட்  இசா   அப்துல்    சமட்    இன்று   பிற்பகல்     செய்தியாளர்களைச்   சந்திப்பார்     என்று    அறிவிக்கப்பட்டுள்ளது.