நான் ஏன் பணிவிலக வேண்டும்? இசா கேள்வி

isaபெல்டா   குளோபல்    வெண்ட்சர்ஸ் (எப்ஜிவி)    தலைவர்    முகம்மட்  இசா   அப்துல்   சமட்    பணி விலக   வேண்டும்    என்று   கூறப்பட்டிருப்பதை   நிராகரித்துள்ளார்.

“எதற்காக   விலக   வேண்டும்?  தவறு   செய்தது  நானல்லவே”,  என்றவர்    செய்தியாளர்   கூட்டமொன்றில்    வினவினார்.

எப்ஜிபி-யின்   நடப்பு    நெருக்கடிக்குத்   தீர்வுகாண   இசாவும்   எப்ஜிவி   தலைமை   செயல்  அதிகாரி    ஜக்கரியா   அர்ஷாட்டும்  பணி  விலக   வேண்டும்  என     அம்னோ   உச்சமன்ற   உறுப்பினர்    முகம்மட்  புவாட்     ஜகார்ஷி   கேட்டுக்கொண்டிருப்பதற்கு     எதிர்வினையாக     அவர்   இவ்வாறு   வினவினார்.

ஜக்கரியாவை   இடைக்காலத்துக்கு   பணிநீக்கம்    செய்ய   எப்ஜிவி    இயக்குனர்    வாரியம்   முடிவெடுத்திருப்பதை     அடுத்து    இசா,   ஜக்கரியா     இருவருமே    பணிவிலக   வேண்டும்     என்று    புவாட்    கூறினார். அவ்விருவரும்   இனி   இணைந்து   பணியாற்ற    முடியாதுபோல்    தோன்றுகிறது    என்றாரவர்.

அவ்விருவரும்   சர்ச்சையிட்டுக்   கொண்டிருப்பது   எப்ஜிவிமீதான    நம்பிக்கை   குறைந்து   அதன்   பங்கு  விலைகளின்   சரிவுக்கு   வழிகோலும்    என்று   புவாட்   கூறினார்.

ஜக்கரியா   தாம்   எந்தத்   தவறும்   செய்யவில்லை    என்றும்   அதனால்   தாமும்    பணிவிலகப்  போவதில்லை    என்று   நேற்று    கூறியிருந்தார்.