சரவாக் ரிபோர்ட் ஆசிரியர்: என்னிடம் இருக்கும் ஆவணங்களை ஐஜிபி பார்த்திருக்கிறார்

 

IGPseendocumentsசரவாக் ரிபோர்ட் குறிப்பிட்டுள்ள அதே ஆவணங்களை உயர்நிலை சிறப்பு பணிப்படையின் உறுப்பினர் என்ற முறையில் ஐஜிபி காலிட் அபு பாகார் நிச்சயமாக பார்த்திருக்க வேண்டும் என்று சரவாக் ரிப்போர்ட்டின் லண்டனைத் தளமாகக் கொண்ட ஆசிரியர் கிளேர் ரியுகாஸல்-பிரவுன் கூறினார்.

ஐஜிபிக்கு கொடுப்பதற்கு உண்மையில் அவர் பார்க்காத எதுவும் என்னிடம் இல்லை என்று கூறிய கிளேர், இந்த ஆவணங்கள் கண்டிப்பாக அவருக்குப் போயிருக்க வேண்டும் என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

இன்று காலை, ஐஜிபி, பிரதமர் நஜிப் வழக்குரைஞர் ஷாபி அப்துல்லாவுக்கு ரிம9.5 மில்லியன் கொடுத்தார் என்ற சரவாக் ரிபோர்ட் கூறிக்கொண்டது மீதான ஒரு விசாரணைக்கு உதவுவதற்கு ரியுகாசல்-பிரவுன் மலேசியாவுக்கு வர வேண்டும் என்று கூறியிருந்ததற்கு எதிர்வினையாற்றிய கிளேர் இவ்வாறு கூறினார்.

இதனிடையே, காலிட்டுக்கு உதவ தாம் விரும்புவதாக கூறிய கிளேர், அவரைக் கைது செய்வதற்கான கைது ஆணைகள் தயாராக இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

தம்மை இண்டர்போல் சிவப்பு நோட்டீசின் கீழ் வைப்பதற்கு மலேசிய போலீஸ் மேற்கொண்ட முயற்சிகளைக் குறிப்பிட்ட அவர், வேண்டுமென்றால் காலிட் அவரது அதிகாரிகளை யுகேக்கு அனுப்பி வைக்கலாம். அவர்களை மகிழ்ச்சியுடன் சந்தித்து அவர்களின் விசாரணைக்கு உதவ முடியும் என்றாரவர்.