நேற்று, குளுவாங் ரமதான் பஜாரில் மக்களுக்கு பேரீச்சம் பழங்களை விநியோகம் செய்து கொண்டிருந்த டிஎபி குளுவாங் நாடாளுமன்ற உறுப்பினர் லியு சின் தோங்கும் அவரது பரிவாரமும் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.
மூன்று வருடங்களில் இது லியுவுக்கு இரண்டாவது அனுபவம்.
இச்சம்பவம் சுமார் 5.45 க்கு நடந்ததாக லியுவின் உதவியாளர் ஷீக் ஒமார் அலி கூறினார்.
இளைஞர் கூட்டம் ஒன்று தங்களை சபித்ததோடு மூர்க்கத்தனமாக நடந்துகொண்டு விரட்டியடித்ததாக அவர் கூறினார்.
அதில் ஒருவர் தங்களை 2014 ஆண்டு நடந்த ரமதான் பஜாரிலிருந்து விரட்டியடித்த அதே ஆள் என்று அடையாளம் காணப்பட்டதாக அவர் கூறினார்.
நோக்கம் நல்ல நோக்கம்தானே.அதற்கு இடையூரூ செய்வானேன்.?இனவாதம் பூசுவானேன்? இனவாதிகளின் கை இங்கு ஓங்கியே காணப்படுகிறது.
ஒருவர் தவறு செய்வதால் அனைவரையும் இனவாதிகள் என்று சொல்வது தவறு.
“அவர்கள்” இடத்தில் ” இவர்” க்கு என்ன அப்படி முக்கிய வேலை. கடந்த தைப்பூச விழாவின் போது பத்துமலை அடிவாரத்தில் மலாய்க்காரர்கள் வியாபாரம் செய்ய நிர்வாகம் அனுமதித்தது. இப்பொழுது நாம் ராமாதான் பசாரில் வியாபாரம் செய்ய அனுமதி கிடக்குமா?????.
கனவு கண்டு கொண்டிருங்கள். 60 -ஆண்டுகளில் நமக்கு என்ன கிடைத்திருக்கிறது?
ஐயா dark justice அவர்களே– நீங்கள் கூறுவது ISIS சை பற்றி அவன்கள் கூறுவது போல் இருக்கிறது. – மலேசியாவில் இனவாதம் இல்லை என்று கூறுபவர்கள் தங்களின் தலையை எங்கு வைத்திருக்கின்றனர்? 1957 ல் நிலைமை எப்படி -இன்று எப்படி? முன்னேற வேண்டும் எல்லா மலேஷியரும் முன்னேற்றம் காண வேண்டும் -ஒரு இனத்தை தலைமேல் தூக்கிவைத்தும் மற்றவர்களை சாக்கடையில் வீசினால் அது முன்னேற்றம் அல்ல. அத்துடன் இந்தோ-பங்களா-ஆப்கானி கள் எப்படி நம்மை விட உயர்ந்தவர்கள்? அவர்களில் எவ்வளவு பேர் இந்நாட்டில் குடிமக்களாக வளம் வந்து கொண்டிருக்கின்றனர்? இதற்கு என்ன பதில் ?