ஜூலை 4 இல் நடைபெறவிருக்கும் புஜூட் இடைத்தேர்தலில் பிஎன் பங்காளித்துவக் கட்சிகளில் எந்தக் கட்சி போட்டியிடும் என்று இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
அது சரவாக் எஸ்யுபிபி-யா அல்லது யுபிபி-யா என்பதை முடிவு செய்யும் பொறுப்பை சரவாக் முதலமைச்சரிடம் விட்டுவிடுகிறோம் என்று சரவாக் பிஎன் தலைமைச் செயலாளர் ஸ்டீபன் ருண்டி கூறினார்.
தம்மைப் பொறுத்தவரையில், அது எஸ்யுபிபி -யா அல்லது யுபிபி-யா என்பது முக்கியமல்ல என்று கூறிய அவர், வேட்பாளர் வெற்றியை உறுதி செய்பவராக இருப்பது முக்கியமாகும் என்று அவர் மேலும் கூறினார்.
புஜூட் இருக்கையைச் சீன சமூகத்தினருக்கு கொடுக்க வேண்டும் என்பதில் பிஎன் இணக்கம் கண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
புத்ரா உலக வாணிப மையத்தில் சரவாக்கியர்களுடன் நோன்பு துறக்கும் நிகழ்ச்சிக்குப்பின் மலேசியாகினியிடம் பேசிய ஸ்டீபன் ருண்டி, இது பற்றிய முடிவு எடுக்கும் பொறுப்பு முதலமைச்சர் அபாங் ஜொஹாரி ஒபெங்கிடம் விடப்பட்டுள்ளது என்றார்.
எந்தத் தேர்தலிலும் நம்பிக்கையுடன் இறங்க வேண்டும். இல்லையன்றால், அதில் அர்த்தமில்லை. எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. எது நல்லது எனப்து குறித்து நாம் மக்களை நம்பவைக்க வேண்டும் என்று ஸ்டீபன் மேலும் கூறினார்.