அரச மலேசிய போலீஸ் தலைமையகமான புக்கிட் அமனானில் எல்லாப் பிரிவுகளையும் சேர்ந்த உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் குற்றப் பிரிவில்(என்சிஐடி) குறைந்தது 20 பேர் ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்டு விட்டதாக இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் கூறினார்.
“எல்லாப் பிரிவுகளிலும் உயர்நிலை அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன், நோன்புப் பெருநாளுக்குப் பின்னர் அது நடக்கலாம்”, என்றாரவர்.
பிடிஆர்எம்-மில் அதிகாரிகளின் இடமாற்றம் வழக்கமான ஒன்றுதான், என்றும் வழக்கத்துக்கு மாறாக எதுவும் நடக்கவில்லை என்றும் காலிட் வலியுறுத்தினார்.