முஸ்லிம்கள் தீவிரவாத இயக்கங்களுடன் சேரக்கூடாது, ஸாகிட் கூறுகிறார்

 

Dontjoinextremistsதீவிரவாத இயக்கங்களுடன் சேர்ந்து சமயத்தின் புனிதத்தன்மையையும் நாட்டின் நற்தோற்றத்தையும் கலங்கப்படுத்திவிடக் கூடாது என்று முஸ்லிம்களுக்கு துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹாடி நினைவுறுத்தியுள்ளார்.

இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) போன்ற தீவிரவாத அமைப்புகளின் நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்டுள்ள இந்நாட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயங்காது என்று அவர் கூறினார்.

உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டம் இப்போது இல்லையென்றாலும், நம்மிடம் ஏராளமான இதர சட்டங்கள் இருக்கின்றன. அவற்றால் இது போன்றவை நடப்பதைத் தடுக்க முடியும் என்று அவர் மேலும் கூறினார்.

தீவிரவாத இயக்கங்களால் கவரப்பட்டு அவற்றில் சேர்பவர்கள் சமய அடித்தளம் அற்றவர்கள் என்று நேற்றிரவு பெர்லிஸில் ஸாகிட் கூறினார்.

மந்திரிபுசார் அஸ்லான் மான், பிரதமர்துறை அமைச்சர் ஷாகிடான் காசிம் மற்றும் சுமார் 1,000 பேர் அவருடன் இருந்தனர்.

மிக அண்மையத் தகவல்படி, பல நாடுகளிலுள்ள இஸ்லாமிய அரசுகளில் சேர்ந்த 36 மலேசியர்கள் இதுவரையில் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஸாகிட் மேலும் கூறினார்.