சிலாங்கூர் மாநில அரசு ஊழியர்களுக்கு இரண்டு மாதச் சம்பளத்தை ஹரி ராயா சிறப்பு அலவன்சாக ஜூன் 21 இல் அளிக்கும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் முகமட் அஸ்மின் அலி இன்று அறிவித்தார்.
மாநிலத்தின் 17,703 அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படவிருக்கும் அலவன்சின் மொத்தத் தொகை ரிம63.3 மில்லியன் ஆகும் என்றாரவர்.
சிலாங்கூர் மாநிலத்தின் மேம்பாட்டிற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் அன்பளிப்பு இது என்று அஸ்மின் தெரிவித்தார்.
இது மட்டுமல்ல. இவ்வாண்டின் இறுதியில் அரசு ஊழியர்களுக்கு இன்னுமொரு நிதி ஊக்கமளிப்பும் கொடுக்கப்படும். ஆனால், அது அரசு ஊழியர்கள் மற்றும் இலாகாகளின் செயல்திறனைப் பொறுத்திருக்கும் என்றாரவர்.
அரசு ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுகிறார்களா ! நல்ல “ஜோக்”. வரவிருக்கும் தேர்தலுக்கு அன்பளிப்பு என்ற பெயரில் கையூட்டு ! யாரும், யாருக்கும் சளைத்தவர்களல்ல !
கையூட்டு இல்லாமல் மலாய்க்காரன் வாக்கு போட மாட்டான்.
மத்திய / மாநில அரசு ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுகிறார்களா ? இல்லையா ? என்பது ஒருபுறமிருக்கட்டும்.
சிலாங்கூர் மாநிலத்தைஆட்சி செய்யும் எதிர்க்கட்சி தனது மாநில
அரசு ஊழியர்களுக்கு இரண்டு மாதச் சம்பளத்தை சிறப்பு அலவன்சாக வழங்கும்போது,
நாட்டை ஆளும் BN அரசாங்கம் மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் நான்கு மாதச் சம்பளத்தை அல்லவா சிறப்பு அலவன்சாக அறிவித்து இருக்க வேண்டும்.
என்ன இருந்தாலும் BN அரசாங்கத்தின் தலைவர் நஜிப் இந்த புனித நோன்பு மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களை இப்படி கேவலபடுத்தி அல்லது அவமானப்படுத்தி இருக்கக்கூடாது.
நாட்டின் கஜானா காலியாக இருப்பதால் மத்திய அரசு ஊழியர்களுக்கு சிறப்பு அலவன்ஷ் வழங்க முடியவில்லை என்று BN அரசாங்கத்தின் தலைவர் நஜிப் வெளிப்படையாக அறிவித்திருந்தால், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆறுதலாக இருந்திருக்கும்.