13 ஆவது பொதுத் தேர்தலுக்கு பிரதமர் நஜிப்பிடமிருந்து ரிம10 மில்லியன் பெற்றதாக கூறப்படுவதை சிலாங்கூர் மசீசவின் பொருளாளர் லூ கூய் தியாம் மறுத்துள்ளார்.
இதற்கான எந்தப் பதிவும் சிலாங்கூர் மசீசவின் வங்கி அறிக்கையில் இல்லை. இது கட்சி மாசற்றது என்பதைக் காட்டுகிறது என்றாரவர்.
சரவாக் ரிப்போர்ட்டின் அடிப்படையில் இக்குற்றச்சாட்டை சுமத்திய டிஎபியின் கோலகுபு பாரு சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங்கை கடுமையாகச் சாடி லூ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது சிலாங்கூர் மசீசவின் பெயரைக் கெடுப்பதாகும் என்று கூறிய லூ, இது சிறுபிள்ளைத்தனமான சாக்கடை அரசியல் தந்திரம் என்று அவர் மேலும் கூறினார்.
இக்குற்றச்சாட்டை விசாரிக்கக் கோரி லூ ஜூன் 8 இல் போலீஸ் புகார் செய்துள்ளார்.
ஹஹஹஹ்- எலும்பு துண்டு கட்சி வேறு என்ன சொல்லும்?
நாம் இங்கு இவ்வளவு பேசுகிறோம்– தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது-பொதுவாக இந்தியாவில் என்ன நடக்கிறது? தமிழ் நாட்டின் நாற்றம் குமட்டுகிறது– அங்குள்ள ஈனங்களின் மடத்தனம் அப்பட்ட அகங்காரம் சகிக்கவில்லை. சொல்வதற்க்கே எரிகிறது. பணத்திற்கும் அதிகாரத்திற்கும் நம்பிக்கை நாயகனையும் மண்ணை கவ்வ வைத்திருக்கின்றனர்.