பதிவு செய்யப்படாத அன்னிய தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருப்போர் ஜூன் 30க்குள் அவர்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். அப்படி செய்யத் தவறுவோர் பிரம்படி தண்டனையை எதிர்நோக்குவர்.
ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் சட்டவிரோத தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருப்போருக்கு பிரம்படி தண்டனை அல்லது ஒவ்வொரு தொழிலாளருக்கும் ரிம10,000 அபராதம் விதிக்கப்படலாம் எனக் குடிநுழைவுத்துறை தலைமை இயக்குனர் முஸ்டபார் அலி கூறினார்.
“இப்படிப்பட்ட தொழிலாளர்களை பிப்ரவரி 15-இல் தொடங்கப்பட்ட இ-கார்ட் முறையின்கீழ் பதிவு செய்ய வேண்டும் என எத்தனையோ தடவை எச்சரித்து விட்டோம். ஆனால் இன்னும் செய்யாமலிருக்கிறார்கள். ஜூலை 1க்குப் பிறகு இவர்களை விரட்டிப் பிடிப்போம்”.
கடைசி நேரத்தில் வந்து பதிவிடங்களில் பெரும் நெரிசலை ஏற்படுத்த வேண்டாம் என்றும் முஸ்டபார் கேட்டுக்கொண்டார்.
எந்தப் பருப்பும் வேகாது சார்! ஒரு வங்காளதேசியை பார்த்து,” ஏண்டா, லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஒட்டுகிறாயே, போலீஸ் பிடித்துவிடும் என்ற பயமில்லையா? என்று கேட்டேன். அதற்கு அவன், ” Kasi dia sipulu ringgi sudah lah ” என்றான். அதற்கு , அவன் பக்கத்திலிருந்த அவனது நண்பன் சொன்னான், “Itu dulu lah . Sekarang kasi satu rokok sudah lah ” என்றானே. நாடு உருப்படுமா? எவ்வித வேலை பெர்மிட்டும் இல்லாமல் ஒன்றரை லட்சம் வங்காள தேசிகள் நம் நாட்டில் வேலை செய்கின்றனர் என ஆய்வுகள் கூறுகின்றன. (அதற்கு மேலே உள்ளனர் என சிறு குழந்தைக்கும் தெரியும்). இவர்களில் பாதிப் பேரையாவது நீங்கள் பிடித்துவிடுவீர்கள்?
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படித்தான் கணக்கெடுப்பு , பதிவு, அபராதம் , சிறை தண்டணை என்றெல்லாம் அறிக்கை விட்டுக்கொண்டிருப்பார்கள் !!! நண்பர் சிங்கம் சொல்வது போல்
” ஒரு பருப்பும் ” வேகாது !
தவறு நண்பர்களே! இந்திய தொழிலாளர்களுக்குத் தான் இந்தக் கெடுபிடி! வங்காள தேசிகளுக்கல்ல!