சரவாக் ரிப்போர்ட் பத்திரிகையின் ஆசிரியர் கிளேர் ரியுகாசல்- பிரவுன், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லாவுக்கு ரிம9.5 மில்லியன் கொடுத்தார் என்று அப்பத்திரிகை வெளியிட்டிருந்த செய்தி தொடர்பான போலீஸ் விசாரணைக்கு உதவ மலேசியா வர வேண்டும் என இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் மீண்டும் கேட்டுக்கொண்டார்.
ஆனால், இங்கு வந்து போகும்வரை அவரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க இயலாது என்றும் காலிட் கூறினார்.
“அவருடைய பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க மாட்டேன்.
“அப்படிச் செய்தால் அவர் சத்தம் போட்டுக்கொண்டே இருப்பார், அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிக்கொண்டே இருப்பார்”, என இன்று கோலாலும்பூரில் செய்தியாளர் கூட்டமொன்றில் காலிட் கூறினார்.
போலீஸ் விசாரணைக்கு உதவ மலேசியா வர வேண்டும் ஆனால் போலீஸ் படையால் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க இயலாது என்ன ஒரு மடத்தனமான அறிக்கை அதுவும் போலீஸ் படை தலைவர் காலிட் அபு பக்காரிடமிருந்து.
அட வடி கட்டின அடி மட முட்டாள் பயலே அல்லது
முட்டாள் பய மவனே,
இதை சாக்கா வைத்து மலேசிய போலீஸ் விசாரணைக்கு தன் நாட்டு குடிமக்களை மலேசியாவுக்கு அனுப்பிவைக்க முடியாது என வட கொரியா சொன்னாலும் நியாயமே என்று நீயே நிரூபித்து விட்டாயே.
அடிப்படையற்ற குற்றச் சாட்டை அள்ளி வீசிக்கொண்டிருப்பார் என்றால் அவர் ஏன் இங்கு வரவேண்டும்?
ஐயா RAHIm அவர்களே– நாம் என்ன சொன்னாலும் ஒன்றும் ஆகப்போவது இல்லை காரணம் எல்லாமே அவன்கள் வைத்ததே சட்டம்– நீதி நியாயம். இனவெறி மத வெறி மாக்கள் இருக்கும் போது சிறுபான்மை நியாயவாதிகள் ஒன்றும் செய்ய முடியாது. இந்த நாட்டில் அநியாயத்திற்கு துணை போகும் ஈனங்கள் பெருமளவில் இருக்கின்றனர்.
IGP சொல்வதில் அர்த்தம் உள்ளது. ஆம்! சரவாக் ரிப்போட் ஆசிரியர் இங்கு வருவாரேயானால், அவரின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் கிடையாது என IGP சொல்கிறார். உண்மைதான், நம் நாடு காவல்துறையின் லட்சணம் அப்படி. எதற்கும் லாயக்கில்லாதது. அல்தான்துயா கொலைக்காரனையே பிடிக்க முடியவில்லையே!
“அல்தான்தூயாவா! அப்படி யாரும் மலேசியாவுக்குள் வந்ததாக சான்று இல்லையே” குடிநுழைவுத்துறை இப்படி ஒரு “செய்தி” வெளியிட்டாலும் ஆச்சிரியப்படுவதிற்கில்லை. IGP பாதுகாப்புப் படை தலைவரல்ல.நம் அரசியல்வாதிகளின் மெய்க்காப்பாளர்.
ஐயா singam அவர்களே–நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.