ஜோகூர் அடுத்த பொதுத்தேர்தலில் இரண்டாவது ‘பினாங்கு’ ஆகும் என்கிறார் கிட் சியாங்

 

JohorenextPenangKitSiangமலேசிய எதிர்க்கட்சிகளின் கூட்டணி பினாங்கில் செய்ததைப் போல் ஜோகூர் மாநிலத்தைக் கைப்பற்றி அதை ஒரு முன்நிலை மாநிலமாக்க முடியும் என்று டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் நம்புகிறார்.

பினாங்கைப் போல், ஜோகூர் ஒரு முன்நிலை மாநிலமாக வெற்றி பெற்றால் இதர மாநிலங்களான கெடா, பேராக், சிலங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகியவற்றின் ஆதரவோடு புத்ரா ஜெயாவில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான கட்டம் தயாரகி விடும் என்றாரவர்.

14 ஆவது பொதுத்தேர்தலில் ஜோகூரை முன்நிலை மாநிலமாக்குவதற்கு ஹரப்பானுக்கு இரு நோக்கங்கள் இருக்கின்றன – 14 ஆவது பொதுத் தேர்தலில் அரசியல் மாற்றத்தை முன்னெடுத்தல் மற்றும் தோல்வி கண்ட நாடாவதிலிருந்து மலேசியாவை காப்பாற்றுதல்.

இது நடக்காத காரியம் என்று பலர் கூறுகின்றனர். ஆனால், இது சாத்தியம் என்று கூறும் கிட் சியாங், கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு எதிரணி ஜோகூரில் நுழைய முடியாத நிலை இருந்தது. அந்நிலை கடந்த பொதுத்தேர்தலில் முற்றிலும் மாறிவிட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

13 ஆவது பொத்துத்தேர்தலில், 56 இருக்கைகளைக் கொண்ட ஜோகூர் மாநில சட்டமன்றத்தில் ஹரப்பான் 19 இருக்கைகளைக் கைப்பற்றியது. இன்னும் ஒரு இருக்கை கிடைத்திருந்தால் பிஎன் மூன்றில்-இரண்டு பெரும்பான்மையை இழந்திருக்கும் என்றாரவர்.